டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
Page 1 of 1

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
ஆனாலும் நேற்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ம.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூரில் இருந்து சேலத்துக்கு வந்து கொண்டிருந்த ஒரு அரசு பஸ் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்து நிறுத்தியது. பயணிகளை கீழே இறக்கிவிட்டு பெட்ரோலை பஸ் மீது ஊற்றி தீ வைத்தனர். பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் இந்த மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 6 பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் மாநில இளைஞரணி செயலாளர் அருள் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொளத்தூர், தியாகராயநகர் பகுதிகளில் சாலைமறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகில் மாநில துணைத்தலைவர் கே.என்.சேகர் தலைமையில் 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போரூர், கொரட்டூர் போன்ற பகுதிகளிலும் சாலை மறியல் நடந்தது. இதில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெட்டேரி அருகே புழல் பைபாஸ் சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், மாவட்ட செயலாளர் குணா, மாதவரம் முன்னாள் சேர்மன் சண்முகம் உள்பட 150 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் பாரதிதாசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திருவள்ளூர் மணவாளநகரில் மாநில துணைத்தலைவர் டாக்டர் பாலயோகி, துணை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் உள்பட 200 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பட்டு கிராமத்தில் கேசவன் தலைமையில் 50 பேரும், புதுமாவிலங்கையில் தாஸ் தலைமையில் 50 பேரும், பேரம்பாக்கம், திருவாலங்காடு, மப்பேடு ஆகிய இடங்களில் 100 பேரும் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
கும்மிடிப்பூண்டியில் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.செல்வராஜ் தலைமையில், மாவட்ட தலைவர் ரவி, நகர செயலாளர் ஏகாம்பரம் உள்பட 40 பேர் கைதானார்கள். செஞ்சியில் ஒரு கும்பல் 4 அரசு பஸ்களின் கண்ணாடிகளை கல்லாலும், தடியாலும் தாக்கி உடைத்துவிட்டு தப்பி ஓடியது. இதில் சில பயணிகள் காயமடைந்தனர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவங்களை அடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன.
திருப்பத்தூரில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களின் கண்ணாடிகளை ஒரு கும்பல் கல்லாலும், தடியாலும் அடித்து நொறுக்கியது. இதில் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தது. பயணிகள் அலறியடித்து ஓடினர். போலீசார் அந்த கும்பலில் இருந்த 2 பேரை விரட்டி பிடித்தனர். 2 இடங்களில் நடுரோட்டில் டயரை கொளுத்தி போட்டனர்.
மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் பிறப்பித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 37 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவையில் இந்திரா காந்தி சிலை அருகே மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே ஒரு தனியார் பஸ் மற்றும் 2 அரசு பஸ்களின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கற்கள் வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராமதாஸ் கைதை கண்டித்து வன்முறை: 3 பஸ்கள் எரிப்பு, 100 பஸ்கள் சேதம்
» புதுவை: ராமதாஸ் கைதை கண்டித்து முழு அடைப்பு
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
» விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum