மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
Page 1 of 1

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் நூற்றுக்கணக்கான வன்னிய இளைஞர்கள் அடித்து காயப்படுத்தப்பட்டனர். இதற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தச் சென்ற போது, போலீசாரால் டாக்டர் ராமதாஸ் உட்பட கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, மாமல்லபுரத்தில் இந்தாண்டு நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா தொடர்பான ஒரு வழக்கிலும், கடந்த ஆண்டு விழா தொடர்பான இன்னொரு வழக்கிலும் டாக்டர் ராமதாசை கைது செய்வதற்கான பிடி ஆணைகளை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சாரதி திடீரென பெற்றுள்ளார். பா.ம.க. தலைவர்கள் மீதும் இரு வழக்குகளிலும் பிடி வாரண்டுகளை போலீசார் பெற்றுள்ளனர்.
டாக்டர் ராமதாசையும், மற்ற பா.ம.க. தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும்.
பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிலவும் சூழலை பயன்படுத்தி, தமிழகத்தில் சிறு தவறு நடந்தாலும் அதற்கு பா.ம.க. தான் காரணம் என்று பழி போட திட்டமிட்டிருக்கின்றனர். எனவே, பா.ம.க. தொண்டர்கள் பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது
» அஜீத் நடிக்கும் அசல் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!
» சரப்ஜித் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு
» வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ராமதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum