தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல்: பா.ஜ.க. வெளிநடப்பு

Go down

பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல்: பா.ஜ.க. வெளிநடப்பு Empty பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல்: பா.ஜ.க. வெளிநடப்பு

Post  ishwarya Thu May 02, 2013 6:12 pm

பாராளுமன்ற மக்களவையில் இன்று 12 மணிக்கு சுமூகமான நிலை உருவானது. என்றாலும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு மிக மோசமான, ஊழல்கள் நிறைந்த அரசாக, மன்மோகன் அரசு உள்ளது. அவரையும் சட்ட மந்திரியையும் காப்பாற்ற அரசு முயல்கிறது. இந்த அரசின் லட்சணத்தை இன்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறிவிட்டது.

எனவே இந்த அரசு ஆட்சி செய்ய தகுதி உள்ள அரசு அல்ல. ஆட்சி செய்யும் தகுதியை இந்த அரசு இழந்து விட்டது. நிதி மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு கேட்டதால்தான் நாங்கள் இங்கு அமர்ந்து இருந்தோம். ஆனால் நிதி மசோதாவை தாக்கல் செய்யும் தகுதியும் இந்த அரசுக்கு இல்லை. எனவே அரசை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி கமல்நாத், எல்லா பிரச்சினைகள் மீதும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றார். இதையடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்களும் பா.ஜ.க. எம்.பி.க்களும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினார்கள்.

இந்த கூச்சல் அமளிக்கிடையே நிதி மசோதா தாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து பா.ஜ.க. தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பா.ஜ.க.வை தொடர்ந்து அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், இடது சாரி கட்சிகளும் பாராளு மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

நிதி மசோதாவை விவாதம் இன்றி எடுத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக இந்த கட்சிகள் தெரிவித்தன.

பாராளுமன்றத்தில் இன்று நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த மசோதாவை விவாதம் இன்றி நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி எதிர்க் கட்சிகளுக்கு சபாநாயகர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்ததை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிதி மசோதாவில் 12 திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இதுதவிர சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வரிச் சலுகைகளை ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிக்கு கேளிக்கை வரி: சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்
» வெளிநடப்பு வெளிநடப்பு
» ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு
» தண்டனை குறைப்பு போதாது: தி.மு.க. வெளிநடப்பு
»  டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum