தண்டனை குறைப்பு போதாது: தி.மு.க. வெளிநடப்பு
Page 1 of 1
தண்டனை குறைப்பு போதாது: தி.மு.க. வெளிநடப்பு
சட்டசபையில் இன்று தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களின் தண்டனை 6 மாதமாக குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வெளிநடப்பு செய்தது.
சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு அரிய நாடகம் அரங்கேற்றப்படுகிறது. நேற்றைய தினம் சபாநாயகர் 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களுக்கு ஓராண்டு நீக்கம் என்று அறிவித்தார். அதை எல்லா கட்சிகளும் கண்டித்தன.
இன்று செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்து விரிவாக பேசுகிறார். ஏற்கனவே திட்டமிட்டு முடிவு எடுத்தப்படி முதல்- அமைச்சரும், 6 மாதமாக தண்டனையை குறைக்கலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து சபாநாயகர் தண்டனையை குறைத்து இருக்கிறார். இந்த தண்டனையும் ஏற்க முடியாது ? எம்.எல்.ஏக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் இது என்றார்.
உடனே ஒரு நிருபர் டெல்லி மேல் சபை தேர்தலில் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை இவர்களுக்கு உருவாகுமே என்று கேட்டார். அதற்கு ஸ்டாலின் இதுக்குத்தான் இவ்வளவு நீண்ட தண்டனையோ என்று உங்கள் பழக்கத்துக்கே விட்டு விடுகிறேன் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு
» ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு
» வெளிநடப்பு வெளிநடப்பு
» பாராளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல்: பா.ஜ.க. வெளிநடப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum