டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு
Page 1 of 1
டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம்: சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு
டெசோ மாநாடு குறித்து அமைச்சர் விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
டெசோ மாநாடு
சட்டசபையில் நேற்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் பல உறுப்பினர்கள் பேசினார்கள். அதற்கு சமூகநலத்துறை அமைச்சர் பி.வளர்மதி பதில் அளித்து பேச தொடங்கினார்.அப்போது அமைச்சர், ‘‘தமிழ்ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால், சிலர் டெல்லியில் டெசோ மாநாடு நடத்தினார்கள். போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களையே மாநாட்டில் கலந்து கொள்ள செய்தார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு
டெசோ மாநாடு குறித்து அமைச்சர் பேசியதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சமூகநலத்துறை மானியக்கோரிக்கைக்கும் டெசோ மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று கேட்டார். டெசோ மாநாடு குறித்த பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.தொடர்ந்து அமைச்சர் வளர்மதி பேசத்தொடங்கியதும் தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் குரல் எழுப்பினார்கள். அப்போது பேசிய அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ‘‘இலங்கையில் 2009–ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் உங்கள் டெசோ அமைப்பு எங்கே போனது? தமிழர்களை தாக்குதலுக்கு உள்ளானபோது, ஆட்சியில் இருந்த நீங்கள் தடுக்கவில்லையே? அங்கு எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் டெசோ மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்’’ என்றார்.
வெளிநடப்பு
உடனே மு.க.ஸ்டாலின், 2009–ம் ஆண்டு இலங்கையில் இறுதி கட்ட போர் நடந்த நேரத்தில் கருணாநிதி என்ன செய்தார்? என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். அப்போது, அமைச்சர் கே.பி.முனுசாமி பேசும்போது, 2009–ம் ஆண்டு இந்த டெசோ எங்கே சென்றது? அப்போது தமிழர்களை காப்பாற்ற நீங்கள் முயற்சி செய்தீர்களா? இல்லையே என்று குறிப்பிட்டார்.மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது. டெசோ மாநாடு பற்றிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தி.மு.க. கொறடா ஆர்.சக்கரபாணி உள்பட அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்களின் வெளிநடப்புக்கு சபாநாயகர் ப.தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு
» ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு
» தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 7 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
» விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காப்பதற்கு 183 கிலோ மீட்டருக்கு சூரிய மின்வேலி சட்டசபையில் அமைச்சர் தகவல்
» அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ருசியான தானிய லட்டு, அல்வா சட்டசபையில் அமைச்சர் பி.வளர்மதி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum