பெண்களை பயமுறுத்தும் `அழைப்புகள்!'
Page 1 of 1
பெண்களை பயமுறுத்தும் `அழைப்புகள்!'
பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றன, பெருநகரங்கள். தற்போது இன்னொரு வகை தொந்தரவும் அதிகரித்து வருகிறது. அது, பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்களை பாலியல் பெண்களாகக் கருதி `அழைப்பது'. குறிப்பாக, பெங்களூரில் பெண்கள் சமீபமாக இந்த சங்கடத்தை அதிகமாக அனுபவித்து வருகிறார்கள். இங்கு பஸ் நிறுத்தங்களில் பெண்கள் தனியாக நிற்கவே யோசிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
அவர்களை நெருங்கும் `சபலிஸ்டுகள்', `வர்றியா?' என்று கேட்டு விடுகிறார்கள். எல்லா பெரிய நகரங்களையும் போல இங்கும் பரவலாக பாலியல் பெண்கள் நடமாடுகிறார்கள். பஸ் நிறுத்தத்தில் அப்பாவியாக நிற்கும் பெண்ணை `அழைப்பதற்கு' அதையே சாக்காக கூறிவிடுகின்றனர் ஆண்கள். எங்கே தங்களிடம் `வர்றியா?' அல்லது `எவ்வளவு?' என்று கேட்டுவிடுவார்களோ என்ற பீதியிலே பெண்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கிறார்கள்.
பஸ் நிறுத்தம் என்றில்லை, எங்கே தாங்கள் தனியாக நின்றாலும் இந்த ஆபத்துதான் என்கின்றனர் சில பெங்களூர் பெண்கள். சாலையில் விரையும் கார்களும் தனியாக நிற்கும் பெண்களைக் கண்டால் வேகம் வெகுவாகத் தணிந்து அருகே வந்து பின் நகர்கின்றன. அன்றாடம் பஸ் ஏறும் முதுகலைப் பட்டதாரி மாணவி கூறுகிறார், ``இரவு எட்டு மணிக்குப் பிறகு பஸ் ஸ்டாண்ட் என்பது பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பில்லாத இடமாக மாறிவிடுகிறது.
அங்கு எல்லா இடங்களிலும் விபசாரப் பெண்கள் சுற்றித் திரிகிறார்கள். அவர்களைக் குறிவைத்து வரும் ஆண்களுக்கு, சாதாரணப் பெண்களும் இலக்காகி விடுகிறார்கள். சபல ஆண்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களை உரசிக் கொண்டு நடப்பது, மோசமாகக் கண்ணடிப்பது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.
'' அதே பஸ் ஸ்டாண்டில், `எவ்வளவு?' என்ற கேள்வி தன்னிடம் பலமுறை கேட்கப்பட்டிருப்பதாக `பகீர்' தகவலைக் கூறுகிறார், ஐ.டி. துறையைச் சார்ந்த பெண்... ``இப்போதெல்லாம் நான் எனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் தான் பஸ் பயணம் மேற்கொள்கிறேன். நான் ஒரு ஆணுடன் இருப்பதால் யாரும் என்னை அணுகுவதில்லை. ஆனால் பஸ் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கூடுதலாக பெண் போலீசாரை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெஜஸ்டிக்கில் உள்ள பாலம், இரவில் ரொம்பவே பயமுறுத்தும் இடம். அங்கு ஆண்களின் பார்வையே மோசமாக இருக்கும்'' என்கிறார் இவர். மாநகரங்கள், பெண்களுக்கு மாநரகங்களாக மாறி வருகின்றன! சட்டங்கள் பெண்களுக்கு துணையாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பயமுறுத்தும் பாத்ரூம் மரணங்கள்
» பெண்களை அழகாக்கும் குறிப்புகள்
» பெண்களை கண்காணிக்கும் காமிராக்கள்
» பெண்களை தாக்கும் இதய நோய்
» பெண்களை குஷிப்படுத்தும் பரிசுகள்
» பெண்களை அழகாக்கும் குறிப்புகள்
» பெண்களை கண்காணிக்கும் காமிராக்கள்
» பெண்களை தாக்கும் இதய நோய்
» பெண்களை குஷிப்படுத்தும் பரிசுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum