தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயமுறுத்தும் பாத்ரூம் மரணங்கள்

Go down

பயமுறுத்தும் பாத்ரூம் மரணங்கள் Empty பயமுறுத்தும் பாத்ரூம் மரணங்கள்

Post  meenu Sun Jan 27, 2013 4:01 pm


மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், எனக்கு மிகவும் வேண்டிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த அம்மா, நல்ல தேக ஆரோக்கியத்துடன் தான் இருந்தார். அவரும் இப்படித்தான், இரவில் பாத்ரூமுக்குப் போனவர், பாத்ரூமிலேயே இறந்து விட்டார். இந்த மாதிரி பல நிகழ்ச்சிகள், அங்கங்கே நடக்க, நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். டூ பாத்ரூம் போகும் நேரத்தில், நெஞ்சில் ஏற்படும் இறுக்கத்தால், நெஞ்சினுடைய ரத்த அழுத்தம் அதிகமாகிறது.

இதனால், இருதயத்திலிருந்து வெளியேற்றப்படும் ரத்தத்தின் அளவும், அதே நேரத்தில் குறைந்து விடுகிறது. சில சமயங்களில் சில பேருக்கு டாய்லெட் போகும்போது ஏற்படும் திடீர் ரத்த அழுத்தத்தினால், ஏற்கனவே சேதமடைந்து, வீங்கியிருக்கும் ரத்தக்குழாய், வெடித்து விடக் கூடிய ஒரு அபாயகரமான சூழ்நிலை ஏற்படக் கூட வாய்ப்புண்டு. `டூ பாத்ரூம் போனால், ரத்த குழாய் வெடித்து விடுமா' என்று பயப் பட வேண்டாம்.

லட்சத்தில் ஒருவருக்கு, அதுவும் ரத்தக் குழாய் ஏற்கனவே சேதமடைந்துள்ளவர்களுக்குத் தான் இந்த மாதிரி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே நீங்கள் தைரியமாக டாய்லெட்டுக்குப் போங்கள். இதே மாதிரி, டூ பாத்ரூம் போகும்போது, சில சமயங்களில் சில பேருக்கு, ரத்த அழுத்தம் குறைந்து போகக்கூட வாய்ப்புண்டு. எல்லோரும் பொதுவாக, பாத்ரூமுக்குப் போனால், எப்படா, வெளியே ஓடி வருவோம் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி டாய்லெட்டிலிருந்து உடனே வெளியே வரவேண்டும் என்பதற் காக, சிலபேர் வேகமாக எழுந்து நிற்பார்கள். அப்படி வேகமாக எழுந்து நிற்கும்போது, சில பேருக்கு தலை லேசாக சுற்றக்கூடும். `என்னடா இது, டாய்லெட்டுக்குள் வரும் போது, நல்லத் தானே வந்தோம். திடீரென்று தலை சுற்றுகிறதே' என்று பயந்துபோய், சிலபேர் குழப்பமாவதும் உண்டு. பயப்பட வேண்டாம். டாய்லெட் போகிற நேரத்தில் ஏற்படும் ரத்த அழுத்த குறைவு காரணமாக இந்த தலை சுற்றலே தவிர, என்னமோ, ஏதோ என்று நினைத்து பயந்து விட வேண்டாம்.

நான் ஏற்கனவே சொல்லியபடி, டாய்லெட், சரியாக ஒழுங்காக போகாதவர்களுக்குத்தான், வயிற்றுக்கும், நெஞ்சுக்கும் அதிகமாக பிரஷர் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தான் டாய்லெட்டுக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காக டாய்லெட் போகக் கற்றுக் கொள்ளுங்கள்.

கடையில் விற்கிறதே என்பதற்காக, எல்லாவற்றையும் வாங்கி, வயிற்றில் கொட்டிக் கொள்ளாதீர்கள். ஆசனவாய் பகுதியிலுள்ள வால்வுக்கும், சிறுநீரகப்பை வாய்ப்பகுதியிலுள்ள வால்வுக்கும், ஒன்றோடொன்று தொடர்பு உண்டு. அதேபோல் சில விஷயங்களில் ஒன்றுக்கொன்று ஒற்றுமையும் உண்டு. இரண்டு வால்வுகளும் ஒன்றாகவே சுருங்கக் கூடியவை. தனித்தனியாக சுருங்காது.

சிறுநீர் கழிக்கும்போது, இரண்டுமே ஒன்றாக விரிந்து கொடுக்கக்கூடியவை. அதனால் தான், டூ பாத்ரூம் போகும்போது சிறுநீர் வெளியாவதும், சிறுநீர் போகும்போது ஆசன வாய் வழியாக காற்று பிரிவதும் ஏற்படுகிறது. `திடக்கழிவு வெளியேற்றும் செயல்' சில சமயங்களில் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும், சில சமயங்களில் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலும் நடக்கக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது. டாய்லெட் போக வேண்டும் போல் தோன்றும்.

ஆனால் அந்த நேரத்தில், டாய்லெட் போவதற்குண்டான வசதி அந்த இடத்தில் இருக்காது. இப்படிப்பட்ட நேரத்தில், டாய்லெட் போகும் விஷயம், நமது கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்தாக வேண்டும். வயிற்றுக்கு அதிக பிரஷர் கொடுப்பது, ஆசன வாய்ப்பகுதியில் ஏற்படும் காயம், பாதிப்பு, திடீரென ஏற்படும் பயம், குடல் நோய், வயிற்றுப் போக்கு, பிரசவ நேரத்தில் ஏற்படும் ஆசன வாய் பாதிப்பு, மன அழுத்தம் ஆகிய காரணங்கள், கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் திடக்கழிவை வெளியேற்றும் செயலை செய்ய வைத்து விடுகிறது.

`சில பேருக்கு, சிறுநீர் கழிப்பதும், டூ பாத்ரூம் போவதும் தெரிவதில்லை. அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை'' என்று அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர் சொல்ல, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாதிரி நபர்களுக்கு, தண்டுவடத்தில் இடுப்புப் பகுதியில் ஏற்படும் நரம்புக் கோளாறு தான், முக்கியமான காரணமாக இருக்கும். கர்ப்பமுற்றிருப்பவர்கள், தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்கள்- இவர்களுக் கெல்லாம், டூ பாத்ரூம், ஒழுங்காக, சரியாகப் போக, சற்று சிரமப்படும்.

பிறந்த குழந்தைகளுக்கும், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும், டாய்லெட் போகும் விஷயம் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்காது. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில், குழந்தைகள் டாய்லெட் போய் விடும். குழந்தைகள் வளர்ந்து, வரவர, சரியான இடத்தில், சரியான நேரத்தில் டாய்லெட் போக வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுக்க, சொல்லிக் கொடுக்க, அக்குழந்தைகள் டாய்லெட் போகும் விஷயத்தை, தனது கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம், கொஞ்சமாக கொண்டு வர, ஆரம்பித்து விடுகின்றன.

டாய்லெட் போகும் செயல், சிறிய குழந்தைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால் தான், `டயபர்' கம்பெனிகளின் வியாபாரம், சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கட்டுப்பாட்டில் இருந்தால், ஒரு டயபர் கூட விற்காது. அதிக வயதானவர்களுக்கும், நாள்பட்ட நோயில் படுத்திருப்பவர்களுக்கும், `டயபர்' உபயோகிக்கும் பழக்கம், இப்பொழுது அதிகமாக இருக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum