பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Page 1 of 1

தி.மு.க. தலைமை செயற் குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜெய்ஹ¨ந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி கூட்டாளிகளான சபாரத்தினம் உள்பட 16 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் திருமுருகன், வில்வதுரையை தவிர மற்ற 14 பேர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
சபாரத்தினம், சந்தானம், சேகர், கார்த்திக், செந்தில், நாகமுருகன், லிங்கம் ஆகிய 7 பேருக்கு ஜாமீன் வழங்கி கீழ்கோர்ட்டு உத்தரவிட்டது. அட்டாக் பாண்டியின் உறவினர் விஜயபாண்டி மற்றும் பிரபு, ஆறுமுகம், ஜோதிவேல், பிரேம்குமார், முத்துப்பாண்டி, பாண்டியராஜன் ஆகிய 7 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சபாரத்தினம் உள்பட 7 பேருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கீழ்கோர்ட்டால் ஜாமீன் மறுக்கப்பட்ட விஜயபாண்டி உள்பட 7 பேர் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.பி. கே. வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வெயில் கனிராஜூ, முத்துசரவணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, சபா ரத்தினம் உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதுக்கோட்டையில் தங்கி இருந்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனறு நிபந்தனை விதித்தார். அதே போன்று விஜயபாண்டி உள்பட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, அவர்கள் 7 பேரும் தேவகோட்டையில் தங்கி இருந்து கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேவகோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அட்டாக்பாண்டி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீதான விசாரணயை இந்த மாதம் (மே) 3வது வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புழல் சிறையிலிருந்து சக்சேனா விடுதலை – நிபந்தனை ஜாமீன் கிடைத்தது
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு.
» தியேட்டரை அபகரித்து நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்: 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
» திருப்பரங்குன்றத்தில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum