காதலர் கணவர் ஆகும் முன்.......
Page 1 of 1
காதலர் கணவர் ஆகும் முன்.......
உங்கள் காதலர் நல்ல துணைவராக இருப்பாரா என்பதை முடிவு செய்ய சிறிது யோசிக்க வேண்டும். அதற்கான சில விஷயங்கள்...
காதலர் தன்னையே சுற்றிச் சுற்றி வந்தார் என்பதற்காக காதலை ஏற்றுக் கொள்ளக்கூடாது. `நீ குழந்தை மாதிரி நடந்துக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று சொல்கிற காதலர், திருமணத்துக்குப் பிறகு, `நமக்கு திருமணம் ஆகி விட்டது, கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ, குழந்தை மாதிரி நடந்துக்காதேன்னு' திட்டினால் வெறுப்பு விளையும்.
எனவே பொடி வைத்துப் பேசினாலும் மயக்கத்தில் வீழாதீர்கள். நான் உனக்காக எதுஎதையெல்லாம் விட்டுக்கொடுத்தேன், நீ எனக்கு இதைக்கூட செய்யமாட்டியா, இந்த தப்பை பொறுத்துக்க மாட்டியா? என்று உணர்ச்சி பொங்க பேசுபவரும், கெஞ்சுபவரும் சரியான நபரல்ல. அதேபோல `நீ தானே என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னே, நான் இப்படித்தான் இருப்பேன் அட்ஜஸ்ட் பண்ண முடிஞ்சா ஓகே' என்று கண்டிஷன் போடும் ஆணும் சரியல்ல.
அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக நிகழ வேண்டும். வேலையில் இருக்கும் பெண், தனக்கு நிகரான பணியில் இருப்பவரையோ, இணையாக சம்பாதிப்பவரையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருவரும் ஒருபோதும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பவராகவோ, தொழிலை ஒப்பிட்டுப் பேசி வாக்குவாதம் செய்பவராகவோ இருந்தால் காதல் அம்பேல்.
அதுபோலத்தான் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் ஒருவர் மற்றவர் மதத்தையோ, நம்பிக்கையையோ விளையாட்டாகக்கூட கேலி செய்யக்கூடாது. உங்கள் காதலர் அப்படிப்பட்டவர் என்றால் ஓ.கே. ஒருவேளை நல்லவர் என்று நம்பி பழகியபின்பு உங்கள் காதலர் மோசமானவர் என்று தெரிந்தால், தயங்காமல் அவரை விட்டு விலக வேண்டும்.
அதுதான் தெளிவான முடிவு! `இல்லை, நான் அவரை நம்புகிறேன், அவரை மாற்றிக் காட்டுவேன், என்னால் அவரை மறக்க முடியாது' என்று பிடிவாதம் காட்டுவது உங்களை இழப்புகளில் இட்டுச் செல்லும். பள்ளி, கல்லூரியில் தொடங்கும் காதல் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை. இதற்குள்ளாக உறவில் கலந்து விடுபவர்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கிறார்கள்.
எனவே பக்குவப்பட்ட வயதுக்குப் பிறகு தனது ஆசையை விருப்பப்பட்டவரிடம் தெரிவிப்பவரையும், உறவுக்குள் நுழையாமல் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பவரையும் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யுங்கள். காதல் மாதிரியே வாழ்க்கையும் இனிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» ரீமேக் ஆகும் ‘திருட்டு பயலே’
» தமிழில் ரீமேக் ஆகும் ‘காக்டெயில்’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum