தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறிவிட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம், “இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் ட

Go down

இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறிவிட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம், “இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் ட Empty இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறிவிட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம், “இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் ட

Post  ishwarya Thu May 02, 2013 1:50 pm

2003 ஆண்டு ஈராக் படையெடுப்பிற்குப் பின், ஈராக்கிய பொலிஸ் படைகள் நடைமுறைப்படுத்திய கொடூரங்களுடன் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் தொடர்பை பிரித்தானியாவின் கார்டியன் மற்றும் பிபிசி இன் அரபு மொழிச் சேவையாலும் தயாரிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்த ஈராக்கில், ஜெனரல் டேவிட் பெட்ரீயஸ் மற்றும் புஷ் காலத்திய பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பீல்டும், மற்றவர்களும், கொலைக் குழுக்கள், இரகசியச் சிறைகள், சித்திரவதை செயற்பாடுகள் ஆகியவற்றை மேற்பார்வையிட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடியாக வேலை செய்தனர். இக்கொடூரங்கள் ஏற்படுத்திய பெரும் குழப்பத்தின் விளைவாக, நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் உயிரிழந்தனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டவையும் 2010 ஆண்டு இராணுவ சிப்பாய் பிராட்லி மானிங் இனால் மேற்கொள்ளப்பட்ட கசிவின் மூலம் பெறப்பட்ட குறிப்புக்களும் அறிக்கைகளும் கார்டியன்/பிபிசி ஆவணத்தில் காணப்படுகின்றன. ஒபாமா நிர்வாகமானது தவறு செய்த அதிகாரிகளை பாதுகாத்தது; அவர்களில் பலரும் இன்னும் அரசாங்கத்திடம் இருந்துதான் ஊதியம் பெறுகின்றனர்; டேவிட் பெட்ரீயஸ் ஒபாமாவின் CIA இயக்குனராக கடந்த நவம்பர் வரை இருந்தார்.

ஓர் ஆவணமாக வெளியிடப்பட்டுள்ள கார்டியன்/பிபிசி அறிக்கையானது ஓய்வு பெற்ற கேணல் ஜேம்ஸ் ஸ்டீல் உடைய பங்கு பற்றி கவனக் குவிப்புச் செய்கிறது; இவர் பெட்ரீயஸ் மற்றும் ரம்ஸ்பெல்டுடன் இணைந்து செயற்பட்டார். வியட்நாம் சிறப்புப் படைகளில் ஓய்வுபெற்றிருந்த ஸ்டீல் 1984 இல் எல் சால்வடோருக்கு அனுப்பப்பட்டார்; அங்கு அவர் எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கை பிரிவிற்குப் பயிற்சி கொடுத்து அதை இயக்கினார். சால்வடோரிய ஆட்சி, கிட்டத்தட்ட 70,000 இடதுசாரி எதிர்ப்பாளர்களை அரசாங்கத்தின் கொலைக் குழுக்களால் கொலை செய்தது.

2004ம் ஆண்டில், ஈராக்கில் ஆயுத எழுச்சியும், அமெரிக்காவில் போர் எதிர்ப்பு உணர்வுகளின் எழுச்சியும் நடைபெற்ற நேரத்தில், புஷ் நிர்வாகம் “சால்வடோர் விருப்புரிமைக்கு” திரும்பியது. வாஷிங்டனானது 1980 களில் இலத்தீன் அமெரிக்காவில் பயன்படுத்திய வழிவகைகளை பயன்படுத்தி விரைவில் சுன்னி ஈராக்கியர்களை இலக்கு வைக்கும் ஷியாப் பெரும்பான்மையினரை கொலை குழுக்களாக மாற்றியது. சுன்னி ஈராக்கியர்கள் அந்நேரத்தில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு எழுச்சியின் இதயத்தானத்தில் இருந்தனர்.

1980களில் ஹொண்டூரஸில் அமெரிக்கத் தூதரகத்தின் தலைவரான ஜோன் நெக்ரோபொன்ட் தூதராக நியமிக்கப்பட்டார். டேவிட் பெட்ரீயஸ் ஒரு புதிய ஈராக்கிய இராணுவ, பொலிஸ் படையை உருவாக்குவதை மேற்பார்வையிடும் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஸ்டீல் மற்றும் கேணல் ஜேம்ஸ் கோப்மன் ஆகியோரை ஆலோசகர்களாக பெட்ரீயஸ் நியமித்தார். ஸ்டீல் பாக்தாத்தில் “எரிசக்தி ஆலோசகராக” வந்து இறங்கி, கோப்மனுடன் பரா இராணுவத் துருப்புக்களை, உள்துறை அமைச்சரகத்தின் கீழ் இருந்தவற்றிற்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார். இச்சக்திகள் (வொல்ப் பிரிகேட் என்று அழைக்கப்பட்டது உட்பட) பெரும்பாலும் முன்னாள் சதாம் ஹுசைனின் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களாகத்தான் இருந்தனர். பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பெல்டின் குழுவிற்கு தனிப்பட்ட தூதராக ஸ்டீல் இருந்தார்.

2,000 பேர்களைக் கொண்ட இந்த இராணுவப் பிரிவு பாக்தாத், சமாரா, மோசூல் நகரத் தெருக்களில் அமெரிக்க டிரக்குகளில் வலம் வந்து, விசாரணைக்காக சுன்னிக்களை சுற்றிவளைத்துப் பிடித்தது. நூல்நிலையங்கள், விமான நிலையங்கள், அமைச்சரகங்களில் நிறுவப்பட்டிருந்த இரகசியச் சிறைகளில் பிடிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்களும் கொலை செய்யப்பட்டனர். சில நேரம் அடையாளம் காணமுடியாத சடலங்கள் தெருக்களில் அல்லது குப்பைத் தொட்டிகளில் எறியப்பட்டன. ஆயிரக்கணக்கான சடலங்கள் சவக் கிடங்குகளில் ஒவ்வொரு மாதமும் நிறைந்தன; பலரது கைகளில் இன்னமும் பொலிஸ் விலங்குகள் இருந்தன.

“எங்கள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் விலங்கிடப்பட்டு முதுகுப்புறமாக இருத்தப்படுவோம்” என்று ஒரு முன்னாள் சமாரா கைதி கார்டியன்/பிபிசியிடம் கூறினார். “அதன் பின் அவர்கள் எங்களை மண்வெட்டிக்களாலும், குழாய்களாலும் அடிப்பார்கள். கம்பிகளால் நாங்கள் கட்டப்படுவோம் அல்லது கைகளால் மேலே உயரத்தில் தொங்கவிடப்படுவோம்; இவற்றினால் எங்கள் தோள்பட்டைகள் விலகிவிடும்.”

“என் மீது பலமுறை மின்சாரத்தைப் பாய்ச்சினர்” என்று மற்றொரு முன்னாள் கைதி கூறினார். “அவர்கள் என்னை மேலே உயரத்தில் தொங்கவிட்டனர். காதுகளை இடுக்கிகளால் இழுத்தனர், தலையை மோதினர், என் மனைவியைப் பற்றிக் கேட்டனர், அவளை இங்கு அழைத்துவருவதாகவும் கூறினர்.”

புஷ் நிர்வாகம் வொல்ப் பிரிவிற்கு 2 பில்லியன் டாலர்கள் நிதியளித்தது. கைதிகள் சித்திரவதை அடையாளங்களுடன் அரசால் நடத்தப்படுவதும், அமெரிக்க நிதி பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “நீதியின் பிடியில் பயங்கரவாதம்” என்பதில் காட்டப்பட்டனர்; அதில் “பயங்கரவாதம்” குறித்த பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நோக்கம், தெருக்களில் சடலங்களைப் போல், சாதாரண ஈராக்கியர்களை, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களை, அச்சுறுத்துவது ஆகும்.

டொனால்ட் ரம்ஸ்பெல்டிற்கு வாடிக்கையாக குறிப்புக்களை ஸ்டீல் அனுப்பினார்; அவர் அவற்றை ஜனாதிபதி புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் ஷேனேக்கு அனுப்பி வைத்தார். ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த அத்தகைய மின்னஞ்சல் ஒன்றில் ரம்ஸ்பெல்ட் எழுதியதாவது: “இணைக்கப்பட்டுள்ள குறிப்பு அவ்வப்பொழுது நாம் ஈராக்கிற்கு அனுப்பிவைக்கும் நபரிடம் இருந்து வந்தது. இவர் ஈராக்கியப் பொலிசுடன் வேலை செய்கிறார். அவர் திறமையான, கடுமையான, தீவிர அவதானிக்கும் திறமையைக் கொண்டவர்.”

வெள்ளை மாளிகைக்கும் பலமுறை ஸ்டீல் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது

2003-05ல் ஈராக்கின் உள்துறை மந்திரியாக இருந்த தளபதி முன்டடெர் அல்-சமரி கார்டியன்/பிபிசியிடம் ஸ்டீலும் கோப்மனும் தாங்கள் மேற்பார்வையிட்ட காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிவர். “காவல் மையங்களில் நான் அவர்களை 40 அல்லது 50 தடவைகள் பார்த்தபோது ஒன்றாகத்தான் இருந்தனர், தனித்தனியே நான் பார்த்ததில்லை. அங்கு நடப்பது அனைத்தையும் அவர்கள் அறிவர்.... சித்திரவதை, மிகவும் கொடூரமான வகைச் சித்திரவகை அனைத்தையும் பற்றி.”

“நூலகம் ஒன்றின் தூணில் ஒரு 14 வயதுச் சிறுவன் கட்டிவைக்கப்பட்டிருந்தான். அவன் கால்கள் அவன் தலைக்கு மேல் இருக்கும் வகையில் கட்டிவைக்கப்பட்டான். அவனுடைய உடல் முழுவதும் நீலம் பாய்ந்திருந்தது; ஏனெனில் அவன் தாக்கப்பட்டிருந்த கேபிள் கம்பிகளினால் அவைகள் ஏற்பட்டவை” என்று அல் சமாரி கூறினார்.

“காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் ஓலமிட்டார். தற்செயலாக ஜேம்ஸ் ஸ்டீல் வெளியில் தன் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார். கதவைத் திறந்து காவலில் இருப்பவரைப் பார்த்தார். அவர் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கையில் ஜேம்ஸ் ஸ்டீலிடம் எந்த எதிர்விளைவும் இல்லை. அது சாதாரண நிகழ்வுதான். அவர் கதவை மூடிவிட்டு, ஆலோசகர் அறையில் தன் இடத்தில் மீண்டும் உட்கார்ந்தார்” என்றார் அவர்.

2005ல் நியூ யோர்க் டைம்ஸ் பணி ஒன்றிற்காக நிருபர் பீட்டர் மாஸுடன் சென்றிருந்த ஒரு புகைப்படக்காரர் கில்லிஸ் பெரஸ் அவர்கள் இருவரும் ஸ்டீலைப் பேட்டி காண அவருடைய அலுவலகத்தில் சமாரா நூலகத்தில் உட்கார்ந்ததாகக் கூறினார். “சுற்றிப் பார்த்த இடமெல்லாம் இரத்தமாக இருந்தது” என்றார் அவர்.

“இப்பேட்டி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சௌதி ஜிஹாதியும் ஜிம் ஸ்டீலுடன் அறையில் இருந்தார், மூன்று பெரும் ஓலக் குரல்கள் கேட்டன; யாரோ கத்தினார்: ‘அல்லா அல்லா, அல்லா’! என. ஆனால் அது மதக் கூச்சலோ அத்தகைய தன்மையையோ கொண்டிருக்கவில்லை. பெரும் வலி மற்றும் பயங்கரம் தோற்றுவித்த கூச்சல்” என்று மாஸ் கூறினார்.

கார்டியன்/பிபிசி ஆவணம் தெளிவாக்குவது போல், அமெரிக்க ஆயுதப்படைகளின் பரந்த அடுக்குகளுக்கு, அமெரிக்க எழுச்சி எதிர்ப்புத் தந்திரோபாயங்களில் மிக மோசமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் ஆகியவை இருந்தன என்பது நன்கு தெரியும்.

“அதாவது என்ன நடக்கிறது என்பது பற்றி எவரும் கவலைப்படவில்லை என்று அந்த நேரத்தில் மற்றவர்களைப் போல் நானும் உணர்ந்தேன். இராணுவத்தின் மருத்துவப்பிரிவைச் சேர்ந்த நீல் ஸ்மித், சமாராவின் முக்கிய நூலகத்தில் நிறுவப்பட்டிருந்த சிறையில் அவருடைய பிரிவு அமைக்கப்பட்டிருந்தது, கார்டியன்/பிபிசியிடம் அவர் கூறினார்: “எங்கள் பட்டாலியனிலுள்ள எல்லோருக்கும் இது பற்றி நன்கு தெரியும், குறிப்பாக எங்கள் பிளட்டூனிற்கு, விசாரணையில் பெரும் வன்முறை பயன்படுத்தப்பட்டது, அவர்கள் மக்களை அடிப்பார்கள், மின்சாரத்தால் அதிர்ச்சி கொடுப்பார்கள், கிளிப்பார்கள் மற்றும் இன்னும் என்ன கொடூரங்கள் நிகழ்ந்தனவோ எனக்குத் தெரியாது.”

“நீங்கள் ஒருவரை அங்கு அனுப்பினால், அந்நபர் அங்கு சித்திரவதை செய்யப்படுவார், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவார் என்றார் ஸ்மித். “அவமானப்படுத்தப்பட்டு, மிருகத்தனமாக சிறப்புக் கமாண்டோக்களால் நடத்தப்படுவார்கள்; அவர்கள் தாங்கள் கேட்கும் வினாக்களுக்கு தகவல் பெற எதுவும் செய்தனர்.”

ஒரு நிகழ்வில் ஒரேகான் இராணுவ தேசிய படைக்குழு ஒன்று ஈராக்கிய உள்துறை அமைச்சரகத்திற்குள், உள்ள முற்றத்தில் கைதிகளை சீருடை அணியாதவர்கள் தாக்கினர். “நானும் பல கொடூரங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு அறையில் 75 கைதிகள் சிறிய இடத்துள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்” என்றார் ஒரு காவலாளர்.

கைதிகள் (அவர்களில் சிலர் சிறுவர்கள்), உணவிற்கும் குடிநீருக்கும் கெஞ்சினர். முதல் உதவி செய்ய நாடியபோது, சிப்பாய்கள் அவர்களை உடனடியாக அகலுமாறு கோரியதோடு, அவர்கள் கண்டதை வெளியில் கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு ஜூன் 29, 2004 இல் ஏற்பட்டது, ஈராக் உத்தியோகபூர்வ இறைமை பெற்ற நாடு என அமெரிக்கா அறிவித்த முதல் நாள் அன்று நடந்தது.

பல தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகள் அவர்களது நடவடிக்கைகளால் இலாபம் அடைந்தனர். ஜேம்ஸ் ஸ்டீல் இப்பொழுது “பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை” பற்றிய ஊக்கம் கொடுக்கும் பேச்சாளர் ஆவார்; ஒரு பேச்சுக்கு 15.000 டாலர்கள் கட்டணமாகப் பெறுகிறார். Buchanan Renewables என்னும் லைபீரியாவிலுள்ள எரிசக்தி நிறுவனத்தில் அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

சமாராவில் வசிக்கும் மக்கள் “புதன் மாலை ஆவணம் காட்டப்பட்டதை வரவேற்றனர்... ஆயிரக்கணக்கான நகர மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களுக்காக கூடி, ஆவணத்தைப் பார்த்தனர்; பெரிய திரைகள் நிறுவப்பட்டு முழுப் படமும் வெள்ளியன்று வெளியிட திட்டம் தயாரிக்கப்பட்டது” என்று கார்டியனும் குறிப்பிட்டுள்ளது.

“சமாராவிலுள்ள மக்களாகிய எங்களுக்கு முழுக்கதையும் தெரியும். சமாராவில் பலரும் காவலில் இருந்தோம், பெரும் சித்திரவதைகளை அனுபவித்தோம்; சிலரின் சடலங்கள் இன்னும் மருத்துவச் சான்றுத்துறையில் உள்ளன” என்று கார்டியனிடம் வலீட் கலீட் கூறினார். “ஆனால் எங்கள் கதையை உலகம் கேட்டல் மிக முக்கியமாகும்; காவலில் இருந்தவர்களுக்கு எதிரான இந்த மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆக மறுபரிசீலனைக்கு உட்பட வேண்டும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» “இத்தாலிய தூதர் இந்தியாவை விட்டு தப்பி வெளியேற முடியாது” -சுப்ரீம் கோர்ட்!
» கடற்படை வீரர்கள் விவகாரம்: இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ராஜினாமா
» கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது
» சாலையில் சிலைகள், வழிபாட்டிடங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் தடை
» தலைமைச் செயலக மாற்றம் செல்லும்: இந்திய உச்சநீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum