தலைமைச் செயலக மாற்றம் செல்லும்: இந்திய உச்சநீதிமன்றம்
Page 1 of 1

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை
மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றி இப்போதுள்ள அரசு எடுத்த கொள்கை
முடிவில் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டசபை வளாகம்
தமிழகத்தில்
முன்னர் திமுக தலைமையிலான அரசு, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கு பதிலாக
ஓமந்தூரார் தோட்டத்தில் 550 கோடி ரூபாய்கள் செலவில் புதிய தலைமைச் செயலகம்
மற்றும் சட்டசபை வளாகத்தை அமைத்தது.
எனினும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீண்டும்
அமைந்தவுடன், சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தை பழைய வளாகத்துக்கே மாற்ற
உத்தரவிட்டது. புதிதாகக் கட்டப்பட்ட வளாகம் மருத்துவமனையாக மாற்றப்படும்
எனவும் அரசு அறிவித்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது
என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனுவை இதே காரணம் காட்டி, தலைமை நீதிபதி உட்பட மூன்று
நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
அரசு கொள்கை ரீதியாக எடுக்கும் முடிவுகள்
சட்டவிரோதமாக இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று
நீதிபதிகள் கூறிவிட்டனர்.
திமுக ஆட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம்
தமிழக அரசு இடப்பற்றாக்குறை மற்றும் இதர நிர்வாகக்
காரணங்களை காட்டும் போதும் அது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப
முடியாது எனவும் தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தெரிவித்துவிட்டார்.
எனினும் வழக்கு தொடர்ந்த தரப்பினரிடம்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அடுத்து வரும் அரசு வேண்டுமானால்
கொள்கை அடிப்படையில் தலைமைச் செயலம் மற்றும் சட்டசபை வளாகத்தை புதிய
இடத்துக்கு மாற்றும் முடிவை எடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள்
கூறினர்.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு
என்பதால், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றாலும், தலைமை
நீதிபதியிடம் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய வழி இருந்தாலும் அது
ஏற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்று செய்தியாளர்கள்
சுட்டிக்காட்டுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தலைமைச் செயலக மாற்றம்: பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்
» தலைமைச் செயலகத்தை மாற்றுவதை தடை செய்யக் கோரும் மனுக்கள் தள்ளுபடி
» லட்சுமி ராமகிருஷ்ணனை ‘ஷாக்’கடிக்க வைத்த தலைமைச் செயலக அதிகாரிகள்!
» சாலையில் சிலைகள், வழிபாட்டிடங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் தடை
» காவிரி - உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum