தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவபெருமானுக்கு பிடித்த சோமவார விரதம்

Go down

சிவபெருமானுக்கு பிடித்த சோமவார விரதம் Empty சிவபெருமானுக்கு பிடித்த சோமவார விரதம்

Post  ishwarya Mon Apr 29, 2013 2:19 pm

கார்த்திகை மாதத்தில் சோம வாரம் மிகவும் சிறந்ததாகும். திங்கட்கிழமை விரதத்தைத்தான் சோமவார விரதம் என்றழைக்கின்றனர். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விரதம் இது. இந்நாளில் சிவஸ்தலங்களில் 1008 அல்லது 108 சங்காபிஷேகங்கள் நடைபெறும். திருக்கடவூர் என்னும் தலத்தில் இச்சங்காபிஷேகம் மிகவும் விசேஷம்.

சோமன் என்பதற்கு சந்திரன் என்று பொருள். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச அஷ்மியில் சந்திரன் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோமவாரம் தோன்றியது.

தன் பெயரால் தோன்றிய வாரத்தில் தன்னுடைய கிழமையில் (திங்கட்கிழமை) இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என்றும், பதினான்கு ஆண்டுகள் சோமவார விரதத்தை மேற்கொண்டு பூஜைகள் செய்து இரவு முழுவதும் கண்விழித்து, சிவபுராணம் படித்து காலையில் கலச நீரினால் அபிஷேகம் செய்து வழிபடும் கணவன், மனைவி இருவருக்கும் நற்கதியை கொடுக்க வேண்டும் என்றும், சிவபெருமானை பிரார்த்தித்தான்.

அவனுடைய பிரார்த்தனைக்கு இரங்கியவர் அவனுடைய ஆசைகளை பூர்த்தி செய்ததால் சோமவாரம் சிறப்புடையதானது. தவிர, சந்திரன் தட்சனின் இருபத்தொரு பெண்களை மணந்த போதும், அவர்களில் ரோகிணி என்ற பெண்ணுடன் மட்டும் சுகமாக இருந்தான். இதனைக் கண்டு மற்ற பெண்கள் எல்லாம் சேர்ந்து சென்று தட்சனிடம் முறையிட்டனர்.

அவன் கோபம் கொண்டு தேயக் கடவது என்று சந்திரனுக்கு சாபத்தை கொடுத்தான். சாபத்தால் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன், கடைசியில் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தான். தஞ்சம் அடைந்தவன் விரோதியானாலும், அவனை தண்டிக்கக்கூடாது என்பது தர்மம்.

அதனால் தன்னிடம் தஞ்சம் அடைந்தவனை தலையில் எடுத்து வைத்துக் கொண்டார். அன்று முதல் சந்திரன் வளர்ந்தான். அதே சமயம், அவனுடைய சாபத்தை சிவபெருமான் முற்றிலுமாக நீக்கவில்லை. அப்படி செய்தால் இதுவே முன்னுதாரணமாகி, தவறுகள் நடக்க வழிவகுத்து வீடும் என்பதால் தேய்வதும், வளர்வதுமாய் இருப்பாய் என்று சந்திரனுக்கு அருள் புரிந்தார்.

இதைத்தான் தேய்பிறை, வளர்பிறை (பிறை- சந்திரன்) என்று அழைக்கின்றோம். இவ்வாறாக சந்திரன் சிவபெருமானின் திருமுடியில் அமர்ந்ததும் கிருதயுகம் தோன்றியதும், சோமவாரத்தில் தான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum