கார்த்திகை சோமவார விரதம்
Page 1 of 1
கார்த்திகை சோமவார விரதம்
கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த விரதத்தை சந்திரன் அனுஷ்டித்ததாகவும், அதன் காரணமாக சோமவார விரதம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்வர். "சோமன்' என்றால் "சந்திரன்'. அவனை தலையில் சூடிய சிவனை "சோமசுந்தரர்' என்பர்.
கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழவும், தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் தம்பதி சமேதராக சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். வாழ்வில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து, இனி அவ்வாறு தவறு செய்யாமல் இருக்க உறுதி எடுத்தால், அவர்களது பாவங்கள் களையப்படும் என்பது நம்பிக்கை.
பதவி உயர்வுக்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.சங்கு லட்சுமி கடாட்சமுடையது. எனவே, இந்நாளில், செல்வ அபிவிருத்திக்காக சிவனுக்கு சங்காபிஷேகம் செய்கின்றனர். அது மட்டுமல்ல! சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அன்று அவருக்கு சங்காபிஷேகம் செய்வதால் சமுதாயத்துக்கும் நாம் நன்மை செய்தவர்களாவோம்.
இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். மழை தேவையான அளவுக்குப் பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்கம். விரதமுறை: சோமவாரத்தன்று பகலில் ஒரு பொழுதோ அல்லது இரவிலோ உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க வேண்டும். ஒரு மூத்த அந்தணரையும், அவரது மனைவியையும் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சிவபார்வதியாகக் கருதி.
அவர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்து, இயன்றவரை தானம் கொடுக்க வேண்டும். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிப்பதுடன், அன்னதானமும் செய்ய வேண்டும்.
குற்றால அருவியில் நீராடுவது இந்நாளில் மிகமிக விசேஷம். ஏனெனில், இங்குள்ள குற்றாலநாதர் கோயிலே சங்கு வடிவமுடையது. அன்று பெண்கள், மாங்கல்ய பாக்கியம் வேண்டி குற்றாலநாதரையும், குழல்வாய்மொழி அம்பிகையையும் வணங்க வருவர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிவபெருமானுக்கு பிடித்த சோமவார விரதம்
» சகல நலமும் தரும் சோமவார விரதம்
» இன்று சோமவார அமாவாசை
» சோமவார விரத மகிமை............
» கார்த்திகை தீபத்தின் கதை
» சகல நலமும் தரும் சோமவார விரதம்
» இன்று சோமவார அமாவாசை
» சோமவார விரத மகிமை............
» கார்த்திகை தீபத்தின் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum