சனி விரத வழிபாடு பூஜை முறைகள்.........
Page 1 of 1
சனி விரத வழிபாடு பூஜை முறைகள்.........
நோய் நொடிகள் தீர்வதற்கு சனிக்கிழமை சாயங்காலம் சனீஸ்வரர் சன்னிதியில் எள் கலந்த நல்லெண்ணெய் அவரவர் வயதுக்குரிய எண்ணிக்கையில் அல்லது 27 தீபங்கள் ஏற்றி வரலாம்.
தொழில், வேலை வாய்ப்புகள் சார்ந்த விஷயங்களுக்கு பாலபிஷேகம் செய்து வஸ்திரம் சமர்ப்பணம் செய்யலாம். நிர்வாகத்தில், பணியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது கீழுள்ளவர்களால் சிரமப்பட்டால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நீல நிற வஸ்திரம் சமர்ப்பித்து, இளநீர், தேன்,பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்து தீபமேற்றி தரிசனம் செய்தால் தமக்குக் கீழுள்ளவர்களால் ஆதரவும், சுமூக அμகுமுறையும் நிச்சயம் உண்டாகும்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களை அனுசரிக்க முடியாவிட்டாலும் சனிக்கிழமைகளில் மாலை வேளையில் அருகில் உள்ள எந்தத் திருக்கோவிலானாலும் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்து இரவில் பாலோ, பழங்களோ அருந்தி விரதமிருந்து காலையில் குளித்து முடித்து உணவுண்டு விரத பூர்த்தி செய்யலாம். எவ்விஷயத்திலும் சரியான அளவுமுறையும், நிதானமும் முக்கியம் என்பதையே சனி என்ற கோள் நமக்கு குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதை அவ்வாறே கடைப்பிடித்தால் தேவையற்ற சங்கடங்களை நாம் நிச்சயம் தவிர்த்து விடலாம். ஸ்ரீ ஜானகி ராம், சென்னை
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்ரகுப்தர் விரத பூஜை
» ராமநவமி விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» ராமநவமி விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum