தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சத்திய நாராயணா விரத பூஜை

Go down

சத்திய நாராயணா விரத பூஜை Empty சத்திய நாராயணா விரத பூஜை

Post  ishwarya Mon Apr 29, 2013 12:54 pm

சித்திரா பவுர்ணமி தினத்தன்று தெய்வத்துக்குப் பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகள் முதலியவற்றைப் படைப்பர். துளசி மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து சத்தியநாராயணரை வணங்குவர். அதற்குப் பிறகு தான் உணவு உண்பர். இந்தச் சத்தியநாராயண பூசையைத் தொடர்ந்து செய்து வருபவருக்கு மக்கட்பேறு உண்டாகும்.

இதனைச் சத்திய நாராயண விரதம் என்பர். சத்திய நாராயணா பூஜை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்யப்பட வேண்டிய பூஜையாகும். பௌர்ணமியன்று மாலை ஏழு மணிக்குத் தொடங்கலாம்.

செலவு செய்து பூஜை செய்ய இயலாதவர்கள் பௌர்மணியன்று கோவில்களில் நடக்கும் பௌர்மி பூஜையில் கலந்து கொள்ளலாம். திரு மால் அருள் கூர்ந்து நார த முனிவருக்கு உபதேசித்து அருளிய பூஜையாகும். திருமாலுடைய பெயரே ஸ்ரீ சத்திய நாராயணர் என்பதாகும்.

பூஜை செய்யும் முறை.........

* பௌர்ணமியன்று கணபதி, சரஸ்வதி இவர்களுக் கெல்லாம் பூஜை செய்யுமுன் வீட்டில் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

* கணவன் மனைவி இருவரும் பௌர்ணமியன்று சந்திரன் உதயமாகும் நேரத்தில் குளித்துவிட்டுப் பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

* விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை முதலியவற்றைச் செய்து அதன் பிறகு சத்திய நாராயணா பூஜை செய்ய வேண்டும். பிëன்பு ஸ்ரீ சத்யநாராயண அஷ்டோத்ர்ர சதநாமாவளியை உச்சரிக்க வேண்டும்.

* பின்பு தூபம், தீபம், நிவேதனம், கற்பூரம் தீபம் முதலியவற்றைக் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பலன்கள்.....

1.இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எல்லா நலன்களும் பெருகும்.

2.புத்ர பாக்கியம், மோட்ச சாம்ராஜ்யம், புகழ், கௌரவம், செல்வம், அந்தஸ்து, அதிகாரம், பட்டம், பதவி, திருமணயோகம் போன்ற அனைத்தையும் இந்த பூஜை தரவல்லது.

3.குடும்பம் விருத்தியாகும். 4.நாராயணனுக்கு பிடித்தமானது பால் பாயாசமும், பாசிப்பயறு கஞ்சியும் ஆகும். இவற்றை வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

5.உலக மக்கள் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவும் நற்கதி பெறவும் சிறந்த எளிய பூஜையாகும் இது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum