சித்ரகுப்தர் விரத பூஜை
Page 1 of 1
சித்ரகுப்தர் விரத பூஜை
மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பின் துன்பமிலா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும். சித்திரகுப்த பூஜை செய்ய விரும்புபவர்கள் சித்ராபௌர்ணமி அன்று பூஜை செய்யலாம். அன்று உபவாசமிருந்து பூஜை செய்ய வேண்டும்.
சித்திரகுப்த விரதம் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமியன்றும் விரதம் இருந்து, அடுத்த சித்ரா பௌர்ணமி அன்று விரதம் பூர்த்தி செய்வார்கள். அன்று பலரையும் அழைத்து சமார்தனை எனப்படும் அன்னதானம் அளிப்பார்கள்.
சித்திரகுப்த பூஜை செய்பவர்கள் ஆண்டில் ஒரு நாள் செய்வர். விரதமிருப்பவர் ஆயினும் சரி, பூஜை செய்பவராயினும் சரி அன்று அதிகாலை நீராடி விட்டு உபவாசம் இருக்க வேண்டும். (சிலர் சித்திர புத்திரர் கதை நூலை வாங்கி வந்து பூஜையில் அமர்ந்து படிப்பார்கள்).
சித்திரகுப்தருக்கு பிரியமானவையாக சித்ரான்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். (சில கோவில்களில் சித்திரகுப்தருக்கென்று தனியாக சிறு சந்நிதி எழுப்பியிருப்பர். உபவாசநாள் அன்று மாலை அங்கு சென்று கற்பூர ஆரத்தி காட்டி வணங்கி வழிபாடு செய்வது நலம்).
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராமநவமி விரத பூஜை
» சனி விரத வழிபாடு பூஜை முறைகள்.........
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சனி விரத வழிபாடு பூஜை முறைகள்.........
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
» சத்திய நாராயணா விரத பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum