மதுரை சம்பவம்
Page 1 of 1
மதுரை சம்பவம்
மல்லியை கட்டுகிற மதுரையில்தான் சுள்ளியை வெட்டுகிற மாதிரி கொலைகளும்…. அப்படி சில பல கொலை சம்பவங்களைதான் மதுரை சம்பவமாக தொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் யுரேகா. (கிரேக்க மொழியில் யுரேகா என்றால் கண்டுபிடிச்சிட்டேன் என்று பொருள். இவரும் நல்ல இயக்குனர்கள் வரிசையில் வர வேண்டிய கண்டுபிடிப்புதான்)
ஆட்டுத்தொட்டி வைத்திருக்கும் ஆலமரத்தான் குடும்பம்தான் அந்த ஊரின் வஸ்தாது. கள்ளசாராயத்திலிருந்து, கஞ்சா பொட்டலம் வரைக்கும் ‘அடிதடி கட்டுப்பாட்டு வாரியத்தை’யே தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் ஆலமரத்தான் ராதாரவி. இதே தொழிலுக்கு போட்டியாக வரும் அந்த ஊர் எம்.பி. தண்டபாணிக்கும் ஆலமரத்தானுக்கும் முட்டிக் கொள்கிறது. இதில் தண்டபாணியின் மகனை போட்டுத் தள்ளுகிறார் ஹரிக்குமார். இவர் ராதாராவியின் மகன். பதிலுக்கு தண்டபாணி ஏதாவது செய்தாக வேண்டுமே? மாற்றி மாற்றி கத்தியை தீட்டி காதை அறுக்க போகிறார்கள் என்று நினைத்தால் இடையில் புத்தியை தீட்டுகிறார் இயக்குனர். அந்த ஊருக்கு புதிதாக வரும் பெண் இன்ஸ்பெக்டர் மூலமாக.
ஆலமரத்தான் குடும்பத்தையே வேரறுப்பதுதான் இன்ஸ்பெக்டர் அனுயாவின் அசைன்ட்மென்ட். உறவாடி கெடுக்கும் அவரது ஸ்டைலால் ஒவ்வொரு உயிராக பறிபோகிறது. ஆனால் எதுவும் தெரியாத ஹரிக்குமார் அப்பாவை கொன்றவளையே காதலிக்கிறார். கடைசியில் உண்மை தெரிய, என்னாச்சு என்பது அதிரிபுதிரியான க்ளைமாக்ஸ். கதையின் முடிச்சை முன்பே அவிழ்த்தாலும், கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தி செல்கிற ஸ்டைலில்தான் ‘அட’ போட வைக்கிறார் டைரக்டர் யுரேகா!
படத்தின் ஹீரோ(யின்) அனுயாதான். அடங்காத திமிரும், அசால்ட் பார்வையும், ஆளை இழுக்கும் கண்களுமாக ஆக்ஷன் குதிரையாக திமிறியிருக்கிறார். காதலித்த பாவத்திற்கு ஒரு ராத்திரியை அனுபவிப்போமே என்ற அவரது லாஜிக் பகீர். சண்டியருங்களை விரட்டிப் போய், லிப் கிஸ் வாங்கி காதலில் லாக் ஆகும் போது வழக்கம் போல டூயட்டை போட்ற போறாய்ங்களோன்னு பதற வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை…
ஹரிக்குமாருக்கு கதையும், டைரக்டரும் கிடைச்சாச்சு. நடிக்கிறதுக்கென்ன? பல இடங்களில் எமோஷன் கட். ஆனாலும் ஆக்ஷன் சண்டை காட்சிகளில் பாஸ் பாஸ்…
இதைவிட ஒரு தேர்ந்த நடிப்பை எந்த படத்திலும் கொடுத்ததுமில்லை, கொடுக்கப் போவதுமில்லை. அசர வைத்திருக்கிறார் ராதாரவி. தன்னை தேடி போலீஸ் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் அவரது பார்வையும் கண்களும் காட்டுகிற சங்கதிகள் ஏராளம். கடைசியில் அந்த என்கவுன்ட்டர் காட்சியில் கூட விலகாத கம்பீரம். விருதே கொடுத்து கவுரவிக்கலாம்.
இன்னொரு ஹீரோயினாக கார்த்திகா. இவருக்கென்றே பாடல்கள் அமையும் போலிருக்கிறது. டிவியில் கேட்டு கேட்டு ரசிக்கவென்றே அமைந்த பாடல் கண்ணழகா கண்ணழகா… மற்றபடி முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் டம்மி பீஸ்தான்.
ஆச்சர்யமான வரவு ஆனந்த பாபு. ஃபைட் பண்ணுகிற அளவுக்கு தெம்பாகியிருக்கிறார் மனுஷன். பொன்னம்பலத்தை யானை போல் காட்டுகிறார்கள். கடைசியில் பொம்மை. பாராட்டப்பட வேண்டிய இன்னொரு நடிகர் அந்த மண்டையன். (பேரு என்னங்க தம்பி?) முழு நேர கமெடியிலே இறங்கினா கதிகலங்க அடிக்கலாம் கோடம்பாக்கத்தை.
ஜான் பீட்டரின் இசையும், அனல் அரசுவின் பைட்டும் அசத்தல். எடிட்டர்தான் நீளத்தை குறைக்க மனசில்லாமல் விட்டிருக்கிறார்.
அதிர வைக்கும் இன்னொரு மதுர கதை!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹிதேந்திரனின் இதய தான சம்பவம் படமாகிறது
» குமார சம்பவம்
» குமார சம்பவம்
» ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம்
» சம்பவம் படப்பிடிப்புத் துவங்குகிறது
» குமார சம்பவம்
» குமார சம்பவம்
» ஜூன் 4 முதல் அருள்நிதியின் சம்பவம்
» சம்பவம் படப்பிடிப்புத் துவங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum