ஹிதேந்திரனின் இதய தான சம்பவம் படமாகிறது
Page 1 of 1
ஹிதேந்திரனின் இதய தான சம்பவம் படமாகிறது
சென்னை : சன் பிக்சர்ஸ் வழங்க, ஐ பிக்சர்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம், ‘சென்னையில் ஒருநாள்’. சரத்குமார், ராதிகா, விஜயகுமார், சேரன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாகித் காதர் இயக்கியுள்ளார். படம் பற்றி நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது:
பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவான படம், ‘டிராஃபிக்’. கேரளாவில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. நிறைய விருதுகளும் வாங்கியது. தமிழில் ரீமேக் செய்ய கமல்ஹாசன் விரும்பினார். இந்தியில் அஜய் தேவ்கன் ரீமேக் செய்கிறார்.
கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. தமிழில் நாங்கள் ரீமேக் செய்துள்ளோம். மூளைச்சாவு அடைந்த பிறகு தன் இதயத்தை வேறொருவருக்கு தானம் செய்த ஹிதேந்திரன் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறோம். ஏற்கனவே நான் உடலுறுப்புகளையும், கண்களையும் தானம் செய்வதற்கான வாக்குறுதி அளித்துள்ளேன். இப்படம் உடலுறுப்பு தானத்தின் அவசியத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்த நான்கு மணி நேரத்துக்குள் மற்றவருக்குப் பொருத்த வேண்டும். சென்னையிலிருந்து வேலூர் செல்ல இரண்டரை மணி நேரம் போதும். போக்குவரத்து நெரிசல்களை மீறி அந்த இதயத்தை எப்படி கொண்டு சென்று, உரிய நேரத்தில் ஒப்படைக்கிறார்கள் என்கிற பரபரப்பான கதைதான் படம்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு ஹிதேந்திரன் பெற்றோரை அழைக்க இருக்கிறோம். உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நாள், அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்துவேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படமாகிறது பள்ளி மாணவிகளின் பாய்பிரண்ட் கலாச்சாரம்!
» ஜெயமோகனின் உலோகம் படமாகிறது
» பாலியல் படுகொலை படமாகிறது
» ஆனந்த லீலை படமாகிறது நித்தியானந்தா கதை?
» புட்டபர்த்தி கதை படமாகிறது: சாய்பாபா வேடத்தில் பிரகாஷ்ராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum