ஆயிரத்தில் ஒருவன்… வருமா வராதா?
Page 1 of 1
ஆயிரத்தில் ஒருவன்… வருமா வராதா?
aayirathil-oruvanசாதாரண படமாக ஆரம்பித்து, பின்னர் உலக மகா திரைப்படம் என செல்வராகவனால் பீடிகை போடப்பட்டு, பெரும் பணத்தை விழுங்கிய பிறகும் மூன்றாண்டுகளாக ரிலீசாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன்.
பருத்தி வீரன் படத்தை முடித்ததும், நல்ல படத்தில்தான் நடிப்பேன் என்று அதன் நாயகன் கார்த்தி காத்திருந்து நடித்த படம்.
ஆனால் எக்குத்தப்பான பட்ஜெட், நினைத்த நேரத்தில் ஸ்கிரிப்டை மாற்றி மாற்றி இன்னும் படத்தை முடிக்காமல் இருக்கும் செல்வராகவன்… போன்ற காரணங்களால் எப்போதோ ரிலீசாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம், இனி எப்போது ரிலீசானால் என்ன என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே…
இந்த உண்மை புரிந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் இப்போது படத்தின் தாமதத்துக்காக காரணங்களை பத்திரிகைகள் வாயிலாக பரப்ப ஆரம்பித்துள்ளார் (டேமேஜ் கன்ட்ரோல்?!).
அவர் கூறுகையில், “இது வித்தியாசமான படம் (வேற வழி…?). நவீன கதையாக ஆரம்பித்து, சரித்திரத்துக்கு பயணம் செய்யும் கதை.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது முதலில் 7 கோடி ரூபாயில் எடுத்து முடித்துவிடலாம் என்றார் இயக்குநர். ஆனால் பின்னர் ரூ.12 கோடியாகி, தற்போது ரூ.31 கோடியில் வந்து நின்றுள்ளது. இன்னும் எவ்வளவு ஆகும் என்று தெரியவில்லை.
படத்தில் நிறைய ‘கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்’ காட்சிகள் வருகின்றன. படம் தாமதமாவதற்கு இதுதான் காரணம். ‘கிராஃபிக்ஸ்’ வேலைகள் விரைவில் முடிந்துவிடும். பொங்கலுக்கு நிச்சயம் படம் திரைக்கு வந்துவிடும் என நம்புகிறேன்.
ஆனால் நிச்சயமாகச் சொல்கிறேன்… இனிமேல் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது. அதற்கான நேரமும், பொறுமையும் எந்த தயாரிப்பாளருக்கும் இருக்காது.
படத்தின் படப்பிடிப்புக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டம் தேவைப்பட்டது. இவர்களை தங்கவைக்க பல திருமண மண்டபங்கள் தேவைப்பட்டன. கதைப்படி அத்தனை பேருக்கும் கறுப்பு மேக்கப் போடவேண்டும். மேக்கப்பால் மண்டபம் அழுக்காகிவிடும் எனக்கூறி சிலர் மண்டபம் தரமறுத்துவிட்டனர். இப்படி பல சிக்கல்கள்…” என்று கூறியுள்ளார்.
ஆனால் நாம் விசாரித்த வரையில், இந்தப் படத்தின் வேலைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், படத்தின் இயக்குநர் செல்வராகவன், விக்ரம் நடிக்கும் படத்துக்காக லடாக் போய் கேம்ப் அடித்துவிட்டதாகவும் தெரிகிறது!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இடைக்காலத் தடை… பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?
» கம்போடியா, இந்தோனேஷியாவில் ஆயிரத்தில் ஒருவன்
» டைம்லைன்’ தழுவலா ஆயிரத்தில் ஒருவன்?
» ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்
» ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum