தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! Empty ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post  ishwarya Tue Apr 09, 2013 6:23 pm

மயக்கம் என்ன படத்துக்கு எதிர்மறையாகவும், பாராட்டியும் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் தனது இரண்டாம் உலகம் படத்தின் முன்தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! ஆர்யா அனுஷ்கா ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து ராம்ஜியே ஒளிப்பதிவு செய்கிறார்.

இதற்கிடையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றியும் இப்போதே எதிர்பார்ப்புகளை கிளப்பத் தயாராகி விட்டார். அதன் முதல் கட்டமாக, இரண்டாம் பாகத்துகான ஸ்கிரிப்ட் ரெடி என்று சொன்ன செல்வராகவன், தற்போது இந்தப் படத்தில் தனுஷை பயன்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

இதுபற்றி செல்வராகவன் கூறும்போது “ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. இரண்டாம் பாகத்தை என் தந்தை கஸ்தூரிராஜா தயா‌ரிக்கிறார். ஆறு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்தால் தனுஷை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என பல படங்களில் கமிட் ஆகியுள்ள தம்பி தனுஷுக்கு செல்வராகவன் இப்பொதே பிராக்கெட் போட்டுள்ளார்.

அண்ணன் கேட்டு, தம்பி கால்ஷீட் கொடுக்கா விட்டால் எப்படி! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இருந்து தனுஷ் உறுதியாக நடிப்பார் என்கிறார்கள்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum