தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடியரசு தினத்தன்று வெளியாகிறது அசல்

Go down

குடியரசு தினத்தன்று வெளியாகிறது அசல் Empty குடியரசு தினத்தன்று வெளியாகிறது அசல்

Post  ishwarya Sat Apr 27, 2013 4:19 pm

இந்தப் பொங்கலை அஜித்தின் அசலுடன் தலப் பொங்கலாக கொண்டாடலாம் என்றிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்று கசிந்திருக்கும் செய்திதான் இந்த ஏமாற்றத்துக்கு காரணம்.

சரண், அஜித், பரத்வாஜ் காம்பினேஷனில் உருவாகும் நான்காவது படம், அசல். பழி வாங்கும் கதையான இதில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித். அவருக்கு ஜோடி சமீராரெட்டி. படத்தில் பாவனாவும் உண்டு. அஜித்துடன் இரண்டு பாடல்கள் இருப்பதால் நான்தான் நாயகி என கூறி வருகிறார் பாவனா.

சிவாஜி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

தற்போது அதில் சின்ன மாற்றம். பொங்கலுக்குப் பதில் ஜனவரி 26 குடியரசு தினத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம்.

இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள் முடிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum