தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடியரசு தின விழாவில் சினிமா பற்றிய அலங்கார ஊர்தி

Go down

குடியரசு தின விழாவில் சினிமா பற்றிய அலங்கார ஊர்தி  Empty குடியரசு தின விழாவில் சினிமா பற்றிய அலங்கார ஊர்தி

Post  ishwarya Wed Mar 13, 2013 2:51 pm

மும்பை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் விதமாக, அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. வழக்கமாக குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் நமது கலாசாரம் பண்பாட்டை விளக்கும் விதமாகவும் அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார வாகனங்கள் இடம்பெறுவது வழக்கம். இந்த வருட குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடத்தப்பட இருக்கிறது. இதில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய சினிமாவின் சாதனையை விளக்கும் அலங்கார வாகனமும் இடம் பெறுகிறது. இந்திய சினிமாவின் முக்கியமான முகங்கள் மற்றும் பட போஸ்டர்கள் உள்ளிட்ட விஷயங்கள் இதில் இடம்பெறும். இதுதொடர்பாக யு டியூப்பிலும் தகவல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நூற்றாண்டை குறிக்கும் விதமாக சமூக மாற்றத்துக்கு வித்திட்ட நூறு கிளாசிக் படங்களை பல்வேறு நகரங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum