கவிதைகளைத் திருடிட்டாங்க! – பார்த்திபன் புகார்
Page 1 of 1

ஆன்லைனில் என் கவிதைகளைத் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்வதாக நடிகரும் இயக்குநருமான ஆர் பார்த்திபன் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் செய்துள்ளார்.
இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுப்பதாக ஆணையரும் வாக்களித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் என்ற புத்தகம் அவரது அனுமதி இல்லாமல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாம். குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டு திடுக்கிட்ட பார்த்திபன், உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆணையாளரிடம் எழுத்துமூலம் புகார் செய்தார். தனது புகாரில் அவர் கூறியிருப்பது:
2000-ம் ஆண்டில் கிறுக்கல்கள் என்ற புத்தகத்தை நான் எழுதி வெளியிட்டேன். முதல்வர் கருணாநிதிதான் இந்த புத்தகத்தை விழா ஒன்றில் வெளியிட்டார்.
ரூ.250 விலையில் இந்த புத்தகத்தை நான் விற்பனை செய்தேன். இதுவரையிலும் 30 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை செய்துள்ளேன். நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் எனது கிறுக்கல்கள் புத்தகத்தை இணையதளத்தில் வெளியிட்டு அதனை ரூ.495 செலுத்தி டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பொருட்களை திருடுவதை விட உழைப்பை திருடுவது கொடுமையானது. அறிவுசார்ந்த நூல்களை இணையதளம் மூலம் திருடுவது எதிர்காலத்தில் இளைஞர்களை பாதிக்கும்.
அதனால் இணையதளத்தில் வெளியிட்டு டவுன்லோடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது..,” என்று கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பார்த்திபன் நடிக்கும் 3டி படம் “அம்புலி”
» புதுமுகங்களை இயக்குகிறார் பார்த்திபன்
» தமன்னாவின் மாமாவாக பார்த்திபன்?
» கமலுக்கு ஆதரவாக பார்த்திபன் அறிக்கை
» மன்னிக்க வேண்டுகிறேன்… பார்த்திபன் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum