தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களை சிதைக்கும் ’ஆசிட் ’

Go down

பெண்களை சிதைக்கும் ’ஆசிட் ’ Empty பெண்களை சிதைக்கும் ’ஆசிட் ’

Post  meenu Mon Jan 21, 2013 5:03 pm

எவ்வளவு தான் விழிப்புணர்வு இருந்தாலும் பெண்களுக்கு எதிராக பலவிதமான வன்முறைகள் தற்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக முன்னோறி இருந்தாலும் ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து தான் வருகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிகளவில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்கள் தனக்கு பிடிக்காத பெண்களை உயிரோடு சித்திரவதை செய்தற்காக வன்ம புத்தி உள்ளவர்கள் கையில் எடுக்கும் முக்கிய ஆயுமாக மாறி இருக்கிறது திராவகம் (ஆசிட்).

பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே இது பயன்படுத்தப்படுகிறது. காதலியையும், மனைவியையும் அழகு தேவதை என்று வர்ணத்தவர்கள் கூட சிறிய ஊடல் ஏற்பட்டதும் தான் ரசித்த அழகை சின்னாபின்னமாக சிதைப்பதற்காக முகத்தில் ஆசிட் ஊற்றிய கொடூர ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகித்தான் வருகிறது.

உடலாலும், உள்ளத்தாலும் வெந்து போராட்ட வாழ்க்கை நடத்தும் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை அதிக ரணம் மிகுந்தது. உயிர் காக்கும் மருந்துகள் கூட பல இடங்களில் கிடைப்பதில்லை.

ஆனால் ஆபத்துகளை விளைவிக்கும் திராவகம் மற்றும் விஷங்கள் எளிதாகவும் தாராளமாகவும் கடைகளில் கிடைக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். திராவக வீச்சில் ஈடுபடும் ஆசாமிகளுக்கு சட்டம் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum