நடிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ‘பேச்சியக்கா மருமகன்’!
Page 1 of 1

‘திமிரு’ என்ற வெற்றி படத்தை கொடுத்தப் பிறகு இயக்குநர் தருண் கோபிக்கு நடிகர்கள் மீது கொஞ்சம் திமிர் கலந்த கோபம் வந்துவிட்டது. இவர் இயக்கிய படங்களின் நடிகர்களை அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் வெளிப்படையாகவே தாக்கு தாக்கு என்று தாக்கினார். தற்போது ஹீரோவான தருண் கோபி, நடிப்பு என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை புரிந்துகொண்டு நடிகர்கள் மீது கோபம் கொண்டதற்கு தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.
‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்திற்குப் பிறகு தருண் கோபி எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ‘பேச்சியக்கா மருமகன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் அம்மா-பிள்ளை, அப்பா-பிள்ளை, அண்ணன்-தங்கை, அண்ணன்-தம்பி என்ற உறவுகளை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் வராத உறவு ஒன்று என்றால் அது மாமியார் – மருமகன்தான்.
இப்படத்தின் கதை இந்த உறவைப்பற்றியதுதான். இதில் மருமகனாக தருண் கோபி நடிக்க, மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். இப்படத்திற்கு தருண் கோபி கதை, வசனம் எழுத, அவருடைய நண்பரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாலகுமாரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். சபேஷ்-முரளி இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். இதுவரை படங்களை விநியோகம் செய்துவந்த மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பு துறையில் இறங்கியிருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தருண் கோபி, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்திற்குப் பிறகு எனக்கு வந்த கதைகள் அனைத்துமே கையில குச்சிய வச்சிக்கிட்டு ஆடு மேய்ப்பது போலதான் வந்தது. ஆனால் எனக்கு இன்னோரு ராமராஜன் ஆக விருப்பமில்லை அதனால்தான் இவ்வளவு இடைவேளை. இந்த படம் தமிழர்களின் இதயத்தை தாக்கும். இந்த படத்திற்காக ஒரு நடிகனாக பெரும் உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அப்போதுதான் புரிந்தது நடிகர்களின் நிலை. நான் சில நிகழ்ச்சிகளில் பேசும் போது நடிகர்கள் மீது கோவப்பட்டு பேசியிருக்கிறேன். இந்த பிரஸ் மீட்டில் அதற்காக வருத்தமும், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்.” என்றார்.
மருமகனோட திமிர பேச்சியக்கா அடக்கிப்புட்டாளோ…..?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பேச்சியக்கா மருமகன் படத்தின் மூலம் மீண்டும் ஊர்வசி
» ஹன்ஸிகாவிடம் மன்னிப்புக் கேட்ட பிரபு தேவா
» ஆபாசப் பேச்சு: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்!
» ரஜினி பற்றிய கட்டுரை… மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!
» பேச்சியக்கா ஊர்வசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum