கலைஞர் தாத்தாதான் என் உலகம்: அருள்நிதி பேட்டி
Page 1 of 1

மு.க.தமிழரசுவின் மகனும், முதல்-அமைச்சர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி, `வம்சம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை மு.க.தமிழரசு தயாரிக்கிறார். `பசங்க’ படத்தை இயக்கிய டைரக்டர் பாண்டிராஜ் இயக்குகிறார். வம்சம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதி்ல முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆடியோ சி.டி.யை வெளியிட்டார். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அருள்நிதி பேசியதாவது:
பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுவது எனக்கு முதல் அனுபவம். அதனால் நடுக்கமாக இருக்கிறது. கலைஞர் குடும்பத்தில் பிறந்ததற்காக, சத்தியமாக நான் பெருமைப்படுகிறேன். தாத்தாதான் என் உலகம். நான், ஸ்கூல் படிக்கும்போது தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். தினமும் தாத்தா கால்களை தொட்டு கும்பிட்டுவிட்டுத்தான் ஸ்கூலுக்கு போனேன். கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் தனி வீட்டுக்கு போனோம். நான் நடிப்பது என்று முடிவெடுத்ததும், தாத்தா முன்னால் போய் நின்றேன். நடிக்கப்போவதாக கூறினேன். நல்ல டைரக்டரின் படத்தில் நடி என்று தாத்தா என்னை ஆசிர்வாதம் செய்தார். தாத்தா சொன்னது போலவே பாண்டிராஜ் டைரக்ஷனில் நடித்து இருக்கிறேன். இப்போது எனக்கு நடுக்கமாக இருக்கிறது. படம் ஜெயித்த பிறகு உங்கள் முன்னால் வந்து தைரியமாக பேசுகிறேன்.
இவ்வாறு அருள்நிதி பேசினார். அவர் பேசும்போது அவ்வப்போது கண்ணீர் வடித்தார். அவரைத் தொடர்ந்து பேசி படத்தின் நாயகி சுனேனாவும் பேச முடியாமல் தேம்பி தேம்பி அழுதார். பின்னர் அவர் பேசியதாவது:
இது எனக்கு 6வது படம். ரொம்ப நல்ல கதாபாத்திரம். மகிழ்ச்சி மிகுதியால் என்னால் பேச முடியவில்லை. இப்படி ஒரு நல்ல படமும், சிறந்த கதாபாத்திரமும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி. படப்பிடிப்பு முழுவதும் புதுக்கோட்டையில் நடந்தது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு. என்னால் தாங்க முடியவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காகவும், படப்பிடிப்பின்போது என்னை நல்லமுறையில் பார்த்துக் கொண்டதற்காகவும் தமிழ் அங்கிளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அருள்நிதி, தயாநிதி அழகிரியின் தகராறு
» பெயர் வைக்காத படத்தில் நடிக்கிறார் அருள்நிதி
» நான் நடிகன்; அரசியல்வாதி அல்ல: அருள்நிதி!
» மவுன குருவில் நடித்த அனுபவம் பற்றி கூறும் அருள்நிதி
» கலைஞர் கலைஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum