நான் நடிகன்; அரசியல்வாதி அல்ல: அருள்நிதி!
Page 1 of 1

தேர்தலில் திமுக., தோல்வியடைந்தது, என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக்காதீர்கள், நான் ஒரு நடிகன், அரசியல்வாதி அல்ல என்று கூறுகிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான அருள்நிதி, “வம்சம்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல்படத்தில் கிராமத்து இளைஞராக வந்து அசத்திய அருள்நிதி அடுத்து, “உதயன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முழுக்க, முழுக்க நகரத்து வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நகரத்து இளைஞன் ஒருவன் காதலிக்க ஆரம்பித்து, கடைசியில் அந்த பெண்ணை எவ்வாறு கரம்பிடிக்கிறான் என்பதை சற்று வித்யாசமாக சொல்லியிருக்கும் படம்தான் “உதயன்”. இப்படத்தை சாப்ளின் என்பவர் இயக்கியுள்ளார். சூட்டிங் பணிகள் எல்லாம் முடிந்து, இன்னும் ஓரிரு வாரங்களில் திரைக்கு வர இருக்கிறது.
இதனிடையே இப்படம் குறித்து அருள்நிதி கூறியதாவது, முதல்படமான “வம்சம்” படத்தை காட்டிலும் “உதயன்” படத்தில் நடிப்பது ஈசியாக இருந்தது. “வம்சம்” படத்தில் கிராமத்து இளைஞனுக்கு ஏற்றவாறு பேச வேண்டும். இதற்காக “வம்சம்” படத்தில் நிறைய கஷ்டப்பட்டேன். அதேசமயம் “உதயன்” படம் நகரத்து கதை, கூடவே நான் நகரத்திலேயே பிறந்து வளர்ந்ததால், இந்தபடத்தில் நடிக்க சுலபமாக இருந்தது. “உதயன்” ஆக்ஷன் நிறைந்த காதல் சப்ஜெக்ட் படம். படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளது. இந்த சண்டைக்காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். இப்படத்தின் சூட்டிங்கின் போது கால் உடைந்தது. இருப்பினும் தொடர்ந்து நடித்தேன். முன்னதாக “வம்சம்” படத்தில் கை உடைந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. நிச்சயம் இந்தபடம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக அமையும். “உதயன்” படத்தை தொடர்ந்து “மெளனகுரு” என்ற படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை சரத்குமார் என்பவர் இயக்குகிறார், தமன் இசையமைக்கிறார் என்றார்.
தேர்தலில் திமுக தோல்வியால் தங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. நான் ஒரு நடிகன், அரசியல்வாதி அல்ல. சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக பார்க்காதீர்கள் என்று கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் ஒரு நடிகை; அரசியல்வாதி அல்ல: அசின் ஆக்ரோஷம்
» நான் நல்ல நடிகன் இல்லை..!!!: கிஷோர்
» கமலின் வழிகாட்டுதலால் மேலே வந்த நடிகன் நான்: ரஜினிகாந்த்
» ‘பட வாய்ப்புக்காக அழுபவள் அல்ல நான்!’-சீறும் அசின்
» நான் மகான் அல்ல – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum