அசின் இலங்கை சென்ற பிரச்சினை: திரைப்பட கூட்டுக்குழுவில் ஒரு வாரத்தில் முடிவு – ராமநாராயணன்
Page 1 of 1

திரைப்பட அமைப்புகள் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றதும், அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து தமிழர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ததும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, நடிகர் சத்யராஜ் போன்றோர் வற்புறுத்தியுள்ளனர். நடிகர் சங்கத்தில் ஆஜராகி அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகர் சங்க பொதுக்குழுவில் பலர் பேசினர்.
தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்திலும் அசின் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. பிலிம்சேம்பரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நேற்று இக்கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அசின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதா? என்று ராமநாராயணனிடம் “மாலை மலர்” நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
அசின் விவகாரம் பெரிய சர்ச்சையாகி இருப்பதால் அதனை பிலிம்சேம்பர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த பிரச்சினை பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒரு வாரத்தில் திரைப்பட கூட்டுக்குழுவை கூட்டும்படி பிலிம்சேம்பர் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இக்கூட்டுக்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி, விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்களின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். கூட்டுக் குழுவில் அசின் பிரச்சினை சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும்.
முதல்-அமைச்சர் கருணாநிதி திரைப்படத்துறையினருக்கும் வழங்கிய நிலத்தில் வீடுகள் கட்டுவது குறித்தும் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான பணியினை முதல்- அமைச்சர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி பையனூரில் தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு ராமநாராயணன் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கை பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிய சூர்யா, அசின் படங்கள் திரைப்பட கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு
» வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு தளம்: ஜீவா முடிவு
» அசின் மீது தடையா: விரைவில் முடிவு
» சினிமாவில் நடிப்பதை குறைத்துகொள்வேன் : அசின் திடீர் முடிவு
» ராஜபக்சாவுக்கு அசின் நெருக்கமானவர்! சொல்கிறது இலங்கை அரசு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum