இலங்கை பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிய சூர்யா, அசின் படங்கள் திரைப்பட கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு
Page 1 of 1

சூர்யாவின் ரத்தசரித்தரா, அசின் நடித்த ரெடி ஆகிய இருபடங்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இப்படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க திரைப்பட சங்கங்களின் கூட்டுக்குழு விரைவில் கூடுகிறது.
இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விழாவுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட சங்கங்கள் தடை விதித்தன. மீறி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
தமிழ் நடிகர்- நடிகைகள் ஒட்டுமொத்தமாக இவ்விழாவை புறக்கணித்தனர். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றோரும் திரைப்பட அமைப்புகள் வேண்டுகோளை ஏற்று விழாவுக்கு செல்லவில்லை.
ஆனால் சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய் போன்றோர் இதனை உதாசீனம் செய்துவிட்டு இலங்கை படவிழாவில் பங்கேற்றனர். இதையடுத்து ஹிருத்திக்ரோஷன் நடித்து தமிழகத்தில் ஓடிக்கொண்டிருந்த “கைட்ஸ்” படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.
அடுத்து விவேக் ஒபராயின் ரத்தசரித்திரா, சல்மான்கானின் “ரெடி” படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இவ்விரு படங்களில் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரத்த சரித்திரா படம் தமிழ், இந்தியில் தயாராகி உள்ளது. இதில் சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.
“ரெடி” படத்தில் சல்மான்கான் ஜோடியாக அசின் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என அசினை தமிழ் அமைப்புகள் வற்புறுத்தின. ஆனால் அதை மீறிபடப்பிடிப்புக்கு அவர் சென்றார். ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இவ்விருபடங்களும் தமிழகத்தில் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படங்களை தமிழகத்தில் திரையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் கண்ணன் அறிவித்து உள்ளார்.
தியேட்டர் அதிபர்கள் செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் இதுபற்றி கூறும்போது, அனைத்து திரைப்பட அமைப்புகளின் கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இப்பிரச்சினை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதில் ஒருமனதாக எடுக்கப்படும் முடிவை தியேட்டர் அதிபர்கள் சங்கம் அமுல்படுத்தும் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசின் இலங்கை சென்ற பிரச்சினை: திரைப்பட கூட்டுக்குழுவில் ஒரு வாரத்தில் முடிவு – ராமநாராயணன்
» மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஏக்தா கபூர்
» உள்ளாடை போடாமல் வந்து சர்ச்சையில் சிக்கிய நீத்து சந்திரா!
» திருப்பதி வெங்கடாஜலபதியை பாய்பிரண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய காம்னா…!
» நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum