அசின் மீது தடையா: விரைவில் முடிவு
Page 1 of 1
அசின் மீது தடையா: விரைவில் முடிவு
தமிழ்த் திரைப்படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து திரைப்பட கூட்டுக் குழு விரைவில் முடிவு எடுக்கும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ்ர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டும், லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டும் உள்ள நிலையில், இலங்கை சென்று படப்பிடிப்புகள் நடத்தக்கூடாது என்றும், படப்பிடிப்புகளுக்காக தென்னிந்திய நடிகர், நடிகைகள் இலங்கை செல்லக்கூடாது என்றும் தமிழ்த் திரைப்பட கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்நிலையில், சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கும் படத்திற்காக இலங்கை சென்ற அசின், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவியுடன் தமிழர்கள் முகாம்களை சென்று பார்வையிட்டார்.
இதனால் அசினுக்கு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், இதுகுறித்து மாலை முரசு நாளிதழுக்கு சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அவசர வேலை காரணமாக நான் தற்போது டெல்லி வந்திருக்கிறேன். இங்கு எனது பணி முடிந்ததும் சென்னை திரும்ப இருக்கிறேன். நான் சென்னை திரும்பியதும் நடிகை அசின் விவகாரம் குறித்து தமிழ்த் திரையுலக நிர்வாகிகளுடன் விரிவாக கலந்து ஆலோசித்த பின்னர் திரைப்பட கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கூட்டுவது குறித்து அறிவிப்பேன். இதில் நடிகை அசின் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும். அதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று சுரேஷ் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசின் மீது நடவடிக்கை என்ன… நாளை முடிவு செய்கிறது நடிகர் சங்கம்!
» சினிமாவில் நடிப்பதை குறைத்துகொள்வேன் : அசின் திடீர் முடிவு
» அசின் இலங்கை சென்ற பிரச்சினை: திரைப்பட கூட்டுக்குழுவில் ஒரு வாரத்தில் முடிவு – ராமநாராயணன்
» இலங்கை பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிய சூர்யா, அசின் படங்கள் திரைப்பட கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு
» அசின் மீது நடவடிக்கை – ராதாரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum