தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்?

Go down

நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்? Empty நடிகர் சங்கத்தில் இருந்து குமரி முத்து நீக்கம்?

Post  ishwarya Sat Mar 16, 2013 1:29 pm

காமெடி நடிகர் குமரி முத்து நடிகர் சங்கத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டும் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாகவும், நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் பதவியில் இருந்து விலகும்படி கடிதங்கள் எழுதுவதாகவும் புகார் கூறப்பட்டன.

இதையடுத்து குமரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதா ரவி இந்த நோட்டீசை அனுப்பினார். இதற்கு குமரி முத்து பதில் அனுப்பினார். 44 ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறேன். யாரையும் அவமதிக்கவில்லை. என்னைப் போல் நிறைய பேர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு இது போல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்று குமரிமுத்து கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விளக்க கடிதம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 28-ந் தேதி நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது. இதில் குமரிமுத்து விவகாரம் பற்றி விவாதிக்கப்படுகிறது. குமரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவது பற்றி செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று மூத்த நடிகர் ஒருவர் கூறினார்.

நடிகர் சங்க நிர்வாகிகளை விமர்சித்ததற்காக குமரிமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர்கள் பலர் கடிதங்களும் அனுப்பியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கம்?: ராதாரவி பேட்டி
» நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாத நடிகர், நடிகைகளுக்கு தடை; 15-ந் தேதி “கெடு”முடிகிறது
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» நடிகர் சங்கத்தை அவமதித்ததாக குமரி முத்துவுக்கு நோட்டீஸ்!
» பரதேசியில் இருந்து பூஜா நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum