புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
Page 1 of 1
புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
கேரளவாவில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் மலையாள நடிகர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த விவகாரத்தை புறந்தள்ளியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள் என்று அவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் 50 ஆண்டு கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு கேரள அரசு திருவனந்தபுரத்தில் பாராட்டுவிழா நடத்தியது. அந்த விழாவில், மலையாள நடிகர் – நடிகைகள் யாரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
மலையாள நடிகர்களை கவுரவிக்காமல், தமிழ் நடிகரை கவுரவித்த கேரள அரசுக்கும் மலையாள நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. மலையாள நடிகர்களின் இந்த புறக்கணிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், கேரள அரசு எனக்கு பாராட்டுவிழா நடத்தியது சந்தோஷமான விஷயம். என் ஆரம்ப காலம் மலையாள படஉலகில்தான் தொடங்கியது. நான் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்னை ஒரு கலைஞனாக ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு கலைதான் காரணம். அந்த பலம், கலைக்குத்தான் உண்டு. மற்ற மாநிலத்தவர்களை விட கல்வியறிவு அதிகம் உள்ளவர்கள் கேரள மக்கள்.
எனக்கு அவர்கள் ஓர் அங்கீகாரம் கொடுத்ததுடன் மண்ணின் மைந்தன் போல் நடத்தினார்கள். கணியன் பூங்குன்றனார், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. அரசியல், பூகோளம் காரணமாகத்தான் தமிழ்நாடும், கேரளாவும் பிரிந்து இருக்கின்றன. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள்.
கல்யாண வீட்டில் வரும் கருத்து வேறுபாடு போன்றுதான் கேரளாவில் நடந்த சம்பவமும். மலையாள நடிகர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான்.
எனக்கு தமிழ்நாடு ஓர் அம்மா என்றால் கேரளா இன்னோர் அம்மா, என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி
» ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன்
» ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
» கமல்ஹாசன் ஒரு யூனிவர்சல் ஹீரோ
» நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்
» ஹாலிவுட் படத்தில் கமல்ஹாசன்
» ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
» கமல்ஹாசன் ஒரு யூனிவர்சல் ஹீரோ
» நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum