நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்
Page 1 of 1
நான்தான் முடிவெடுப்பேன்: கமல்ஹாசன்
"விஸ்வரூபம்' படம் எப்போது ரிலீஸ் என்பது பற்றி நான்தான் முடிவெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன். என்னுடைய சௌகரியத்துக்காக மட்டுமே ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
திரையரங்குகளில் வெளியாகும் 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டீ.டி.எச். சேவை மூலம் "விஸ்வரூபம்' திரைப்படம் ஒளிபரப்பாகும் என்ற நடிகர் கமல்ஹாசனின் அறிவிப்புக்கு தமிழ்த் திரையரங்க உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில் "விஸ்வரூபம்' படம் முதலில் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும் என்றும், ரிலீஸ் தேதி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் கூறியது:
நான் இப்போது போகும் இந்த வழி புது வழி. என் சுயநலத்துக்கானது அல்ல. விரைவில் இதுவே பொது வழி ஆகும். இந்த விஞ்ஞான மாற்றத்தை யாரும் தடுக்க முடியாது. யாருக்கும் எந்த பாதகமும் இல்லாத வியாபாரம் இது. என்னை தொழில் செய்ய விடாமல் தடுத்தவர்கள், மிரட்டல் விடுத்தவர்கள் என 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவர்கள் யார் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவர்களில் என் நண்பர்களும் இருக்கிறார்கள். என்னுடைய சௌகரியத்துக்காக மட்டுமே "விஸ்வரூபம்' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறேன். இதை நான்தான் சொல்ல முடியும். ஏனென்றால் இது என் சொத்து. இது என் அங்காடி. இதைச் சொல்ல எனக்கு மட்டும்தான் அருகதை இருக்கிறது. படத்தின் ரிலீஸ் எப்போது என்பது பற்றி நான்தான் முடிவெடுப்பேன்.
டீ.டி.எச்.சிலும், திரையரங்குகளிலும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்வது பற்றியும் யோசித்து வருகிறேன். டீ.டி.எச். என்பது நேரடியாக வீட்டுக்கு படத்தைக் கொண்டு செல்லும் விஞ்ஞானம். அதை கேபிள் மூலமாகவோ, கல்யாண மண்டபங்களிலோ, பண்ணை வீடுகளிலோ ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. இந்தப் படம் வெற்றிப் பெறும் என்பதில் எனக்கு அகந்தை இல்லாத நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தில் எந்த சமூகத்தையும் தாக்கும் பிரச்னை இல்லை. திரை அமைப்புகளைச் சேர்ந்த சில நண்பர்கள் எனக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. விரைவில் அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். என் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்பது எதிராளிகளின் கையில்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் என் பாதுகாப்பு படையாகவும் இருக்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல்ஹாசன் - கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி
» கிளாமர்னா நான்தான்…எனக்கு ஆல்டர்நேட் கிடையாது! – நமீதா
» முதல்வராவேன் என்று குரல் கொடுக்காத ஒரே தலைவன் நான்தான்-டி.ராஜேந்தர்
» தலைவா படத்தில் நான்தான் முதன்மை ஹீரோயினி! அமலாபால் கொண்டாட்டம்.
» புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
» கிளாமர்னா நான்தான்…எனக்கு ஆல்டர்நேட் கிடையாது! – நமீதா
» முதல்வராவேன் என்று குரல் கொடுக்காத ஒரே தலைவன் நான்தான்-டி.ராஜேந்தர்
» தலைவா படத்தில் நான்தான் முதன்மை ஹீரோயினி! அமலாபால் கொண்டாட்டம்.
» புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum