தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது – இளையராஜா

Go down

நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது – இளையராஜா Empty நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது – இளையராஜா

Post  ishwarya Wed Apr 24, 2013 12:55 pm

நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே தேசிய விருதைக் கருதுகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

நான்காவது முறையாக இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார் இளையராஜா. மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் எப்போதுமே விருதை எதிர்பார்த்து வேலை செய்வதில்லை. எப்போதும் போலவே பணியாற்றுகிறேன். பழசிராஜா படத்துக்காக கூட நான் கடுமையாக வேலை செய்யவில்லை. கதையைக் கேட்டதும் 2 நாள் டைம் கொடுங்கள் என்று மட்டுமே கேட்டேன். அந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்தேன்.

படத்தில் சரத்குமாரும், மம்முட்டியும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மிகப் பொறுமையாக அதில் நடித்த நடிகர், நடிகைகளை இயக்குநர் நடிக்க வைத்திருந்தார்.

எனக்கு இப்போது கிடைத்திருக்கும் விருது, நல்ல இசைக்கு கிடைத்துள்ள விருதாகவே கருதுகிறேன். இதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அரசாங்கத்திடமிருந்து வந்துள்ள இந்த விருதை மரியாதையோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றார் இளையராஜா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருது: அஜீத்துடன் கொண்டாடிய இளையராஜா
» இளையராஜா, அமிதாப் இன்று தேசிய விருது பெறுகின்றனர்!
» தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum