தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
Page 1 of 1

சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தேர்வுக் குழு தலைவர் ரமேஷ் சிப்பி இதனை டெல்லியில் அறிவித்தார்.
இந்தியில் வெளியான ‘பா’ (Paa) படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு 2009ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் இது.
அமிதாப் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பின்னணி இசை-இளையராஜா:
சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியாகி பெரும் வெற்றி கண்ட பழஸிராஜா படத்துக்காக இந்த விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.
தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் விருதினை இளையராஜா பெறுவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணை ஆகிய படங்களுக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
பசங்களுக்கு 3 விருதுகள்:
சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை பசங்க படம் பெறுகிறது. இதில் நடித்த ஜீவா, அன்புக்கரசுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ரூ. 50,000 சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
அமிர் கான், மாதவன் நடித்த ‘த்ரீ இடியட்ஸ்’ இந்திப் படத்துக்கு சிறந்த பொழுது போக்குப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் அந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘குட்டி ஸ்ராங்கு’ படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.
சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது தேவ் டி படத்துக்கு இசையத்த அமித் திரிவேதிக்குக் கிடைத்துள்ளது.
பெங்காலி மொழிப் படமான ‘அபோ ஹவா’ படத்தில் நடித்த அனன்யா சாட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இயக்கி ரிதுபர்னா கோஷுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.
ஷ்யாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான ‘வெல் டன் அபா’ படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருது நிலாஞ்சனாவுக்கும், பாடகருக்கான விருது ருபம் இஸ்லாமுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த பாடலாசியருக்கான விருது ஸ்வானந்த் கிக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» இளையராஜா, அமிதாப் இன்று தேசிய விருது பெறுகின்றனர்!
» தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த இயக்குநர் பாலா – நான் கடவுளுக்கு 2 விருது
» பா படத்துக்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது
» தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன் – சிறந்த தமிழ் படம் வாகை சூட வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum