முரளிக்கு நடிகர் சங்கம் நினைவஞ்சலி : தந்தை சித்தலிங்கையா பெருமிதம்
Page 1 of 1

நடிகர் சங்கம் மறைந்த நடிகர் முரளிக்கு நேற்று சுவாமி சங்கரதாஸ் ஹாலில் நடந்த கூட்டத்தில் நினைவு அஞ்சலி செலுத்தியது.
இதில் திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகர்களும், தயாரிப்பாளர்களும, இயக்குநர்களும் கலந்து கொண்டு முரளிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் முரளியின் தந்தை பிரபல கன்னட இயக்குநர் சித்தலிங்கையா, முரளியின் மனைவி ஷோபா, மகன்கள் அதர்வா, ஆகாஷ், மகள் காவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் சிவகுமார், நடிகர் சங்கம் எனும் குடும்பத்தை தன் சொந்தக் குடும்பமாக நினைக்குமாறும், எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறும் ஷோபாவிடம் கூறினார்.
முரளி அனைவரிடம் மிகவும் நன்றாகப் பழகுவதை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி நினைவு கூர்ந்தார். விரைவில் நடக்கவிருக்கும் காவ்யாவின் திருமணத்தை நடத்த தமிழ்த் திரையுலகம் முழுவதும் உதவும் என்று ராதாரவி தெரிவித்தார்.
முரளியின் தந்தை சித்தலிங்கையா பேசியதாவது,
இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முரளி குழந்தையில் இருந்தே பிறருக்கு உதவும் மனப்பாங்கு உள்ளவன்.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும்பொழுது தனது காலனிகளையும், உணவையும் இல்லாதவர்களுக்கு கொடுத்துவிட்டு வருவான். திரையுலகில் என் மகன் மீது இவ்வளவு பேர் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதை பார்க்கும்போது நான் பெருமிதம் அடைகிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் முரளியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!
» ‘ஆஸ்கரைவிட உயர்ந்த ரஜினியின் பாராட்டு!’ – நடிகர் சுதீப் பெருமிதம்
» அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
» சோனாவுக்கு நடிகர் சங்கம் ஆதரவு
» நடிகர் சங்கம் - நடக்குமா தேர்தல்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum