தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் முரளியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

Go down

நடிகர் முரளியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!! Empty நடிகர் முரளியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:24 pm

25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று, இந்த மண்னை விட்டு நீங்கிய நடிகர் முரளிக்கு இன்று(08.09.11) முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கடைபிடிக்கப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் உருவான, “பூவிலங்கு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானவர் நடிகர் முரளி. முதல்படத்திலேயே அனைவரின் பாராட்டை பெற்ற முரளி, தொடர்ந்து இதயம், புதுவசந்தம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடிக்கட்டு, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக, ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்த நடிகர் முரளி, காதல், காமெடி ஆக்ஷன் என அனைத்து அவதாரங்களையும் எடுத்துள்ளார். சினிமாவில் 25ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கொடி நாட்டிய முரளி, தனது மகன் அதர்வாவை பாணா காத்தாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக்கி அழகுபார்த்தார். மேலும் அந்த படத்தில் அவரும் ஒருசின்ன ரோலில் வந்து அசத்தினார். முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி நிறுவனமே, அதர்வாவையும் அறிமுகப்படுத்தியது.

தனது மகனின் முதல்படமான பாணா காத்தாடி படத்தின் வெற்றியை முழுசா கொண்டாடுவதற்குள்ளேயே, கடந்த ஆண்டு இதேநாளில் (08.09.10), திடீரென நெஞ்சுவலியால் முரளி மரணம் அடைந்தார். மகனுடன் நடித்த படமே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது. முரளி மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இந்த மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும், அவரது நினைவுகள் இன்றும், அவரது ரசிகர்கள் நெஞ்சில் நிலை கொண்டுதான் உள்ளது. முரளியின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி அவரது ரசிகர்கள் பலரும், அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை: இந்தி படவுலகம் அதிர்ச்சி: புதிய படங்களின் கதி என்ன?
» நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி: முழு விவரம்
» முரளிக்கு நடிகர் சங்கம் நினைவஞ்சலி : தந்தை சித்தலிங்கையா பெருமிதம்
» கற்பழிப்பு வழக்கு: நடிகர் சைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறை
» நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கு – டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum