தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் சங்கம் - நடக்குமா தேர்தல்?

Go down

நடிகர் சங்கம் - நடக்குமா தேர்தல்? Empty நடிகர் சங்கம் - நடக்குமா தேர்தல்?

Post  ishwarya Mon Mar 11, 2013 4:35 pm


நடிகர் சங்கத்தில் இப்போதுள்ள நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததால் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தலைவராக இருக்கும் சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு 3வது முறையாகப் போட்டியிடுகிறார். ஆனால் இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதேபோல் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், துணைத் தலைவர்கள் கே.என்.காளை, விஜயகுமார் ஆகியோரை எதிர்த்தும் யாரும் போட்டியிடவில்லை. செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த கும‌ரிமுத்துவும் கடைசி நிமிடத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டார். இதனால் தற்போது இருக்கும் நிர்வாகிக‌ள் மீண்டும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மொத்தம் உள்ள 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒருவர் மனுவை வாபஸ் வாங்கினால் தேர்தலே நடத்த தேவையில்லை. அதற்கான வேலைகள் சைலண்டாக நடந்து வருகின்றன.

வேட்பு மனுவை வாபஸ் வாங்க வரும் 30ஆம் தேதி கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum