தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வளர்ச்சிக்கு உதவிய 17 பேர்! – கமல்

Go down

என் வளர்ச்சிக்கு உதவிய 17 பேர்! – கமல் Empty என் வளர்ச்சிக்கு உதவிய 17 பேர்! – கமல்

Post  ishwarya Tue Apr 23, 2013 11:30 am

என் வெற்றியில் கணிசமான பங்கு மற்றவர்களுக்கும் உள்ளது. நான் இந்த நிலைக்கு வர ஒவ்வொரு படத்திலும் 17 பேர் காரணமாக இருந்துள்ளனர், என்றார் கமல்.

கமல், திரிஷா ஜோடியாக நடித்த மன்மதன் அம்பு படம் இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. தெலுங்கில் மன்மத பானம் என்ற பெயரில் வருகிறது.

தணிக்கை அதிகாரிகளிடம் யு சான்றிதழ் வாங்கியுள்ளது இந்தப் படம்.

மன்மத பாணத்தின் தெலுங்கு பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. கமல், மாதவன், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

விழாவில் கமல் பேசுகையில், “இந்த கமல் எடுத்தவுடன் ஹீரோவாக வாழ்க்கையைத் துவங்கவில்லை. ஒரு உதவி டான்ஸ் மாஸ்டராகத்தான் சினிமா வாழ்க்கையைத் துவங்கினேன். இதே ஹைதராபாத்தில் ‘வாழ்க்கை ரொம்ப சின்னது. அதை விட சின்னது இளமை…’ என்ற பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அதில் நான் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன். பிறகுதான் நடிகராகி இந்த அளவுக்கு உயர்ந்தேன்.

எனது வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. இதற்கு பின்னால் நிறைய நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். நான் பெரிய நடிகராக இருக்கிறேன். நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் அதன் வெற்றிக்கு 17 பேர் முக்கியமாக இருந்துள்ளனர். அந்தந்த துறையின் நிபுணர்கள் அவர்கள்.

‘மன்மதன் அம்பு’ படத்தில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை நான் பாடி உள்ளேன். இந்த படத்தில் மாதவனும் சங்கீதாவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். த்ரிஷாவின் நடிப்பு இதில் பெரிதும் பேசப்படும், ” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நிறைய பேர் பைனான்ஸ் தருவதால் ரஜினி, கமல், விஜய், சூர்யா படங்களை தயாரிப்பது எளிது – எஸ்.ஏ.சந்திரசேகரன்
» பிரகாஷ் ராஜுக்கு உதவிய ராதா மோகன்
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum