நர்த்தகி படத்திற்கு யு சான்றிதழ் தர திருநங்கைகள் கோரிக்கை
Page 1 of 1

நர்த்தகி படத்திற்கு ஏ சான்றிதழ் தந்துள்ளது தவறானது. அப்படத்திற்கு யு சான்றிதழ் தர வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் நர்த்தகி. இதில் திருநங்கை கல்கி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதற்கு கல்கி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதை ரத்து செய்து விட்டு யு சான்றிதழ் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரவாணிகள் சங்க தலைவி பிரியா பாபு, செயலாளர் கிருபா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரவாணிகள் சங்கம் திருநங்கைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்படுகிறது. தமிழக அரசு எங்களுக்கு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை அளித்தது மட்டுமல்லாமல் அரவாணிகளுக்கு நலவாரியம் அமைத்து பெருமை படுத்தியது. எங்களுக்காக பல நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது.
இந்த சூழலில் திருநங்கைகளாகிய எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எங்களின் வாழ்க்கையை தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் ஜி.விஜய பத்மா, பெண் தயாரிப்பாளர் எஸ்.ஜி.பிலிம்ஸ் புன்னகைப்பூ கீதா தயாரிப்பில் நர்த்தகி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கதாநாயகியாக திருநங்கை கல்வி நடித்துள்ளார். மேலும் நானும், செயலாளர் கிருபா உள்பட பல திருநங்கைகள் நடித்துள்ளோம்.
எங்கள் உணர்வுகளை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எங்களுக்கும் காதல் உணர்வு உண்டு என்பதை தெரிவிக்கவும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நர்த்தகி படத்திற்கு `ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது திருநங்கைகளை கேவலப்படுத்துவதாகும். எனவே தணிக்கைத்துறையை கண்டிக்கிறோம்.
பல படங்களில் கதாநாயகி இரு துண்டு ஆடைகளுடன்தான் ஆடுகிறார்கள். அதற்கு `யு’ சான்று வழங்கும்போது, அதை பார்த்து சிறுவர்கள் கெட்டுப் போகவில்லை என்றால், நர்த்தகி படத்தை பார்த்து கெட்டுப்போக மாட்டார்கள்.
எனவே நர்த்தகி படத்திற்கு வழங்கப்பட்டுள்ள `ஏ’ சான்றை நீக்கி, `யு’ என்று அளிக்கவேண்டும். இதற்கு முதல்வர் கருணாநிதி தலையிட்டு `யு’ சான்று வாங்கித் தர வேண்டும். அவர் வாங்கித்தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
நர்த்தகி படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். இனி வரும் படங்களில் திருநங்கைகளை கேவலப்படுத்துவது போல இருந்தால் அதை தணிக்கை குழு அனுமதிக்கக் கூடாது என்றனர்.
படத்தின் இயக்குநர் விஜயபத்மா கூறுகையில், நர்த்தகி படம் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி திரையிடப்படுகிறது. படத்தில் முகம் சுளிக்கும் காட்சி எதுவும் இல்லை. உண்மையில் திருநங்கைகள் வாழ்க்கையில் நடப்பதை, அவர்களின் பிரச்சினையை படமாக எடுத்துள்ளோம். திருநங்கை நலனுக்காகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 படத்திற்கு யு சான்றிதழ்
» ஒன்பதுல குரு படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
» ஆதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: சென்சார் போர்டு
» நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்திற்கு 'யு' சான்றிதழ்
» விஸ்வரூபத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum