பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
Page 1 of 1

லத்திகா“, “கண்ணா லட்டு தின்ன ஆசையா“ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ 2 லட்சம் கடன் பெற்றார். இதற்காக கடந்த 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் செக் (காசோலை) கொடுத்தார். அந்த செக் பணம் இல்லாமல் பாங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டது.
இதனால் பொன்னுச்சாமி சார்பில் அவரது மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆப் அட்டர்னி பெற்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வக்கீல் கிருஷ்ணன் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜர் ஆகவில்லை. இதனால் 2009-ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வெங்கடாசலம் மீண்டும் மனு கொடுத்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய நாமக்கல் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வக்கீல் நாமக்கல்லில் உள்ள வக்கீல் கிருஷ்ணனுடன் பேசினார். பணத்தை கொடுக்க நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறினார். இது தொடர்பாக நாமக்கல் வக்கீல் கிருஷ்ணனுடன் பேச்சு நடத்த சென்னை வக்கீல் இன்று பிற்பகலில் நாமக்கல் வருகிறார். அவர் வந்ததும் பேச்சு நடத்தி கடன் வாங்கிய பணம் தொழில் அதிபர் பொன்னுச்சாமியிடம் கொடுத்த பிறகு அவர் சார்பில் வெங்கடாசலம் நாமக்கல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார். அதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பார். அதன் பிறகு பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டு வழக்கும் வாபஸ் பெறப்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
» மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
» நித்யா மேனனுக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்-’பியூஸ்’ போய் திரும்பினார்!
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது
» என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum