உலக கோப்பை கிரிக்கெட்: தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து; 50 புதுப்படங்கள் முடக்கம்
Page 1 of 1

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திரைப்படத் துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. வருகிற 19-ந் தேதி முதல் ஏப்ரல் 2-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுவதாலும் அதன் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதாலும் நான்கு மாதங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள 50-க்கும் மேற்பட்ட புதுப்படங்கள் முடங்குகின்றன.
பெரிய பட்ஜெட் படங்களான எங்கேயும் காதல், வானம், கோ, மாப்பிள்ளை, எத்தன், படங்களும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன. எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவி ஹன்சிகா மோட்வானி ஜோடியாக நடித்துள்ளனர்.பிரபு தேவா இயக்கியுள்ளார்.
வானம் படத்தில் பரத், சிம்பு, அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளனர். மாப்பிள்ளையில் தனுசும், கோ படத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர். கிரிக்கெட் போட்டியால் தியேட்டர்களில் கூட்டம் பாதியாக குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க மாநில இணை செயலாளர் திருச்சி எஸ்.ஸ்ரீதர் கூறும் போது,
தியேட்டர் தொழில் ஏற்கனவே நசிந்துள்ளது. கூட்டங்கள் வருவது இல்லை. வசூலாகும் பணமும் தியேட்டர் செலவுகளுக்கு கட்டுப்படியாவதில்லை. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் அச்சுறுத்தலாக உள்ளன. இரு தினங்களுக்கு முன் இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம் நடந்த போதே தியேட்டர் வருவாய் 50 சதவீதம் குறைந்தது.
மெயின் போட்டிகள் நடக்கும் போது கூட்டம் குறையும். இதனால் சில காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். பத்து, பதினைந்துபேரை வைத்து படம் ஓட்ட முடியாது. தியேட்டர் வருமானத்தை பெருக்க ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், டாஸ்மாக் கடை கட்ட அனுமதிக்க வேண்டும் என கோரி உள்ளோம்.
முதல்-அமைச்சரை விரைவில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், கூட்டாக சந்தித்து பேச உள்ளோம் என்றார். திரையரங்க குத்தகைதாரர் ஆர்.ராமானுஜம் கூறும் போது, மதுரை பகுதியில் தியேட்டர்கள் குத்தகை எடுத்து நடத்துகிறேன். கிரிக்கெட் போட்டிகளால் தியேட்டர்களில் 50 சதவீத வருமானம் அடிபடும். கிரிக்கெட் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுவதால் காலை மற்றும் இரவு காட்சிகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படம் பார்க்க ஆளில்லை… தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!
» டிச.15 சினிமா காட்சிகள் ரத்து?
» தீபாவளி படம் ரிலீஸ்: தியேட்டர்களில் 7 நாட்களுக்கு 5 காட்சிகள் அனுமதி

» தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum