தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு

Go down

படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு Empty படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு

Post  ishwarya Sat Apr 20, 2013 11:57 am

“நாடோடிகள்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. இவர் தனுஷ் ஜோடியாக நடித்த “சீடன்” படம் இன்று ரிலீசானது. இதன் படப்பிடிப்பில் அனன்யா ஒத்துழைப்பு அளிக்காமல் தொல்லை கொடுத்ததாக படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

“சீடன்” படம் சிறப்பாக வந்துள்ளது. தணிக்கை குழுவினரே பாராட்டினர். படத்தின் நாயகி அனன்யா நன்றாகத்தான் நடித்தார். ஆனால் மேக்கப் போடும் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அனன்யாவுக்கு வீட்டில் வேலை பார்க்கும் பெண் வேடம்.

எனவே முகம் பளிச்சென்று இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன். அவர் கேட்கவில்லை. நிறைய மேக்கப் போட்டு படப்பிடிப்புக்கு வந்தார். முகத்தை எப்போதும் கொஞ்சம் சோகமாக இருக்கும்படி வைத்துக் கொள்ள சொன்னேன். அதையும் ஏற்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே எங்களுக்குள் சண்டை சச்சரவாகவே இருந்தது.

கடும் வாக்கு வாதங்களும் நடந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தை அனன்யா பார்த்தார். அவர் நடிப்பு பிரமாதமாக வந்திருந்தது. படப்பிடிப்பில் தகராறு செய்ததற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

இவ்வாறு சுப்ரமணியம் சிவா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» படப்பிடிப்பில் விபத்து: நடிகை அனன்யா கை முறிந்தது
» இயக்குனர் அவதூறு பரப்புகிறார்: படப்பிடிப்பில் இருந்து ஓடவில்லை; நடிகை சாந்த்ரா மறுப்பு
» ஒத்துழைக்க மறுக்கிறார் – தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு
» ஆன்ட்ரியாவுக்கு முத்தம்: இசையமைப்பாளர் அனிருத் மீது பார்த்திபன் தாக்கு
» சசிகுமார், அமீர் மீது கவுதம் மேனன் கடும் தாக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum