ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!
Page 1 of 1

ரூ 12 கோடி உடுமலை பேப்பர் மில்லை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோருக்கு வரும் ஆகஸ்ட் 30 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள பேப்பர் மில் அபகரிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் உடுமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 19-ந் தேதி (நேற்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து சக்சேனா, அய்யப்பன் இருவரும் நேற்று உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவருக்கும் வருகிற 30-ந் தேதி வரை காவலை நீடித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி (பொறுப்பு) ஷர்மிளா உத்தரவிட்டார். அப்போது சக்சேனா, அய்யப்பன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. காவல் நீடிப்பு செய்யப்பட்ட சக்சேனாவும், அய்யப்பனும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது
» ரூ.10 கோடி நில அபகரிப்பு புகார்: பிரபல இசையமைப்பாளர் தலைமறைவு
» ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்
» துப்பாக்கி - செப்டம்பர் 10 வரை தடை நீட்டிப்பு
» துப்பாக்கி தடை நீட்டிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum