தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு

Go down

நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு Empty நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு

Post  ishwarya Tue Apr 16, 2013 5:50 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவால் செபடம்பருக்கு தள்ளிப் போன ராணா படத்தின் படப்பிடிப்பு, அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அக்டோபரும் இல்லையாம், நவம்பர் முதல் வாரத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.

சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலும், மருமகன் தனுஷ் வீட்டிலும் என மாறி மாறி ஓய்வெடுத்து வரும் சூப்பர் ஸ்டார், ‘ராணா’ படம் குறித்து வாரம் இருமுறை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

‘ராணா’ வரலாற்று காலப்படம். இப்படத்துக்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். செப்டம்பர் இறுதியில் ராணா ஷூட்டிங் நடைபெறும் என்று முதலில் கே.எஸ். ரவிக்குமார் அறிவித்திருந்தார். பின்னர் அக்டோபர் முதல் வாரம் ஷூட்டிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நவம்பரில் தான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே உள்பட படத்தில் நடிக்க வேண்டிய முக்கிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்க வேண்டியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.தற்போது பண்ணை வீட்டில் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பொழுதைக் கழித்து வரும் ரஜினி, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரை தவிர வேறு யாரையும் சந்திக்கவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினிகாந்தின் ‘ராணா’விற்கு முன் ‘சுல்தான் – தி வாரியர்’
» ராணா படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்? புதிய தகவல்கள்.!
» ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும்! – ரஜினி பேட்டி
» ராணா படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காது… – யூகங்களை வெல்வாரா ரஜினி
» பலகோடியில் சரித்திரகால அரங்குகள்;ரஜினியின் “ராணா” படப்பிடிப்பு எப்போது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum