தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலகோடியில் சரித்திரகால அரங்குகள்;ரஜினியின் “ராணா” படப்பிடிப்பு எப்போது?

Go down

பலகோடியில் சரித்திரகால அரங்குகள்;ரஜினியின் “ராணா” படப்பிடிப்பு எப்போது? Empty பலகோடியில் சரித்திரகால அரங்குகள்;ரஜினியின் “ராணா” படப்பிடிப்பு எப்போது?

Post  ishwarya Wed Apr 10, 2013 1:27 pm

எந்திரனுக்கு பிறகு ரஜினி “ராணா” படத்தில் நடிக்க தயாரானார். கடந்த ஏப்ரல் 29-ந்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினியும், கதாநாயகி தீபிகா படுகோனேவும் நடித்த காட்சிகளை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கினார். அப்போது ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக மே 29-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்த ரஜினி ஜூலை 13-ந்தேதி சென்னை திரும்பினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது யோகா, உடற்பயிற்சிகள் செய்து உடம்பை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். தற்போது முன்புபோல் சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.

சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்ற அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது “ராணா” படம் சரித்திரகால கதை என்பதால் காஸ்ட்யூம், ஆக்ஷன் காட்சிகள் சிரமமாக இருக்கும் என்றும், எனவே சில நாட்கள் ஓய்வு எடுக்கும் படியும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்றார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறினார்.

பின்னர் சென்னையில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசும்போது, என் உடம்பில் வேகம் இருக்கும்வரை நடித்துக் கொண்டே இருப்பேன் என்றார். “ராணா” படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். தீபிகா படுகோனே தவிர மேலும் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோ மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

“ராணா” படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரிக்கு தள்ளிப் போகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்புக்காக ஏற்கனவே ஏ.வி.எம். ஸ்டூடியோவில் சரித்திரகால அரங்குகள் அமைத்து பின்னர் பிரிக்கப்பட்டது. அங்கு மீண்டும் அந்த அரங்குகள் போடப்பட உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum