காலம் வரும்போது அப்பாவை இயக்குவேன்! – ஐஸ்வர்யா தனுஷ்
Page 1 of 1

“தனுஷ் எனக்கு முழுச்சுதந்திரம் கொடுத்திருக்கார். உனக்கு என்ன தேவையோ அதை நினைச்ச மாதிரி எடுன்னு சொல்லிட்டார். என்னோட அம்மா குழந்தைகளைப் பார்த்துகிறாங்க. மாமாவும், அத்தையும் நான் கஷ்டப்படக் கூடாதுன்னு வீட்டுக்குப் பக்கத்திலேயே ஆபீஸ் வைச்சு கொடுத்துட்டாங்க. நான் செல்வராகவனோட அஸிஸ்டெண்ட் என்கிறதால அவரே வந்து முதல் நாள் கிளாப் அடிச்சுக் கொடுத்துட்டார். அதனால நான் இப்போ ‘ரெடி.. டேக்.. ஆக்ஷன்’னு ஓடிக்கிட்டே இருக்கேன்” என்று முகம் மலர்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
அதென்ன ’3′னு ஒரு டைட்டில்?
டைட்டிலுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு. அதை இப்பவே சொன்னா சுவாரஸ்யம் போயிடும். அவுட் லைன் மட்டும் சொல்றேன்.
கதையைக் கேட்டதும் சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்?
முதல் படம் எடுக்கப் போற. அதுக்கேத்த நல்ல கதை. சூப்பரா பண்ணுமான்னு அப்பா ஓ.கே. சொன்னாங்க.
சூப்பர் ஸ்டாரின் மகள், தனுஷின் மனைவி என்பதாலேயே டைரக்டர் ஆகலாம்னு வந்துட்டீங்களா?
வீட்டிலேயே சூப்பர் ஸ்டார் இருக்கும்போது எனக்கு சினிமா மேல் ஆர்வம் வர்றதுல தப்பு இல்லையே. பாலசந்தர் சார், மகேந்திரன் சார், எஸ்.பி.முத்துராமன் சார் இவங்களைப் பார்த்துதான் இயக்குநராகணும்ங்கிற இன்ஸ்பிரேஷன் எனக்கு வந்துச்சு. அதையும் முறைப்படி கத்துக்கிட்டுதான் வரணும்னு நினைச்சேன். முதல்ல ‘பாபா’ படத்துல அஸிஸ்டெண்ட்டாக வேலை பார்த்தேன். பிறகு செல்வராகவனிடம் அஸிஸ்டெண்ட்டாக வேலை பார்த்தேன்.
ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து, அப்பப்ப குறும்படங்கள் எடுத்துக்கிட்டுதான் இருந்தேன். நான் எழுதியதிலேயே கமர்ஷியலான ஷார்ட் ஃப்லிம் கதை இதுதான். தனுஷை மனசுல வெச்சுதான் இந்தக் கதையை எழுதினேன். இந்த கதையையே ஏன் கமர்ஷியல் படமாக பண்ணக் கூடாதுன்னு தனுஷ் கேட்டார். லிங்கா வயித்துல இருந்தப்ப எனக்கு நிறைய நேரம் கிடைச்சது. ஏறக்குறைய ஆறு மாசம் இந்த ஸ்கிரிப்ட்ல வேலை பார்த்தேன். கதையைக் கேட்டதும் சந்தோஷமாக ஓ.கே. சொன்னார் தனுஷ்.
ஸ்ருதி ஹாஸன், அமலா பால் பஞ்சாயத்துதான் என்ன?
முதல்ல ஸ்ருதி ஹாஸன்தான் என்று முடிவானதும் டேட்ஸ் கேட்டோம். அவங்க ஏற்கெனவே கமிட் பண்ணின படங்களால, நாங்க கேட்ட டேட்ஸை கொடுக்க முடியல. அதனால ‘மைனா’வுல அசத்தின அமலா பாலை கேட்டோம். ஓ.கே. சொன்னாங்க. அவங்களுக்கும் டேட்ஸ் பிரச்சினை வர, ஷூட்டிங் டேட்ஸ் தள்ளிப் போச்சு. அதேநேரம் ஸ்ருதிக்கும் அவங்க ஏற்கெனவே கொடுத்த டேட்ஸ் தள்ளிப் போக, ’3′க்கு ஓ.கே சொன்னாங்க. இதுதான் நடந்துச்சு.
சரி உங்கப்பாவை வைச்சு எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க?
அப்பாவுக்கு கதை எழுதுறது ரொம்ப சுலபம். அவர் வந்து நின்னாலே போதும். அதனால எல்லோருக்கும் ஈஸிதான். ஆனால், எனக்கு அவர் அப்பா. அதுதான் முதல்ல வந்து நிக்கிற விஷயம். அதைத் தாண்டி கதை பண்ணனும். காலம் வரும்போது பண்ணலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்
» ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்
» முதல் படம் – ஜெயித்தார் ஐஸ்வர்யா தனுஷ்
» ஐஸ்வர்யா பிறந்தநாளுக்கு தனுஷ் என்ன செய்தார்?
» ரஜினி – தனுஷ் இணைந்து நடிப்பார்களா? – ஐஸ்வர்யா பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum