தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷகீலாவுக்கு கொலை மிரட்டல்! ஆபாசமாக திட்டுவதாகவும் புகார்!!

Go down

ஷகீலாவுக்கு கொலை மிரட்டல்! ஆபாசமாக திட்டுவதாகவும் புகார்!! Empty ஷகீலாவுக்கு கொலை மிரட்டல்! ஆபாசமாக திட்டுவதாகவும் புகார்!!

Post  ishwarya Tue Apr 16, 2013 12:45 pm

பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போனில் பேசும் மர்ம நபர்கள் ஆபாசமான வார்த்தைகளால் தன்னை திட்டுவதாகவும் ஷகீலா புகார் கூறியுள்ளார். போலி சாமியார்களிடம் இருந்து அப்பாவி மக்களை எப்படி காப்பாற்றுவது? என்பதை கருவாக வைத்து, `ஆசாமி என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், கவர்ச்சி நடிகை ஷகீலா போலி சாமியாராக நடிக்கிறார். அவருடன் சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள்.

சாமியார் வேடத்தில் இந்த 5 பேர்களும் ஒரு ஆசிரமத்துக்குள் புகுந்து, அங்கு ஒரு அரசியல்வாதியால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.100 கோடியை கொள்ளையடிப்பது போல் படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கே.செந்தாமரை கண்ணன் என்பவருடன் இணைந்து படத்தை தயாரிப்பதுடன், இயக்கவும் செய்கிறார் ஆண்டாள் ரமேஷ்.

படத்தில், போலி சாமியார்களில் ஒருவராக நடித்து வரும் ஷகிலாவுக்கு போனில் கொலை மிரட்டல் வந்து இருக்கிறது. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், `கடந்த 4 நாட்களாக என் வீட்டுக்கு மர்ம போன் வந்து கொண்டிருக்கிறது. போனை எடுத்ததும், யாரோ ஒரு ஆள் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறான். “நீ போலி சாமியாராக நடிக்கிறாயாமே…நடித்துவிட்டு வெளியே வந்துடுவியா? அந்த படம் வந்தால், நீ வெளியே நடமாட முடியாது என்று மிரட்டுகிறான். `நடிப்பது என் தொழில். எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிப்பேன்.

அந்த வேடத்தில் நடிக்கக்கூடாது, இந்த வேடத்தில் நடிக்கக்கூடாது? என்று சொல்வதற்கு நீ யார்? தைரியம் இருந்தால் நேரில் வா என்று நான் சொன்னதும் போனை வைத்து விட்டான். இன்னொரு ஆள், ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறான். இப்படியே 4 நாட்களாக மர்ம போன்கள் வருகின்றன. யாரோ ஒரு சாமியார் கும்பலை சேர்ந்தவர்கள்தான் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum