தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் பட விவகாரம் : கமலுக்கு கொலை மிரட்டல் டிஜிபியிடம் புகார்

Go down

          விஸ்வரூபம் பட விவகாரம் : கமலுக்கு கொலை மிரட்டல் டிஜிபியிடம் புகார்  Empty விஸ்வரூபம் பட விவகாரம் : கமலுக்கு கொலை மிரட்டல் டிஜிபியிடம் புகார்

Post  ishwarya Wed Mar 13, 2013 5:17 pm

சென்னை: போனில் கொலை மிரட்டல் வருவதாக டிஜிபி அலுவலகத்தில் கமல்ஹாசன் நேற்று புகார் கொடுத்துள்ளார். கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ள படம், ‘விஸ்வரூபம்’. இந்தப் படம் வரும் 10-ம் தேதி டி.டி.எச்.சில் ஓளிபரபாக்கிறது. மறுநாள் தியேட்டர்களில் வெளியாகிறது. டி.டி.எச்.சில் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிஜிபி அலுவலகத்துக்கு கமல்ஹாசன் நேற்று காலை வந்தார். அங்கு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சினிமா துறையில் வித்தியாசமான புரட்சிகளை செய்து வருகிறேன். தற்போது விஸ்வரூபம் படத்தை வரும் 10-ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளேன். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேர்மையான முறையில் நான் தொழில் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர் போன் மூலமாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சட்ட விரோதமானது. யார் மிரட்டல் விடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் பெயர் பட்டியலை, புகார் மனுவில் இணைத்துள்ளேன். 10-ம் தேதி விஸ்வரூபம் படம் கட்டாயம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பு செய்யப்படும். 11-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும். 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. மிரட்டல் விடுப்பவர்கள் Ôவிஸ்வரூபம்Õ படத்தை திருட்டு சிடியாக தயாரித்து விற்பனை செய்வோம் என்றும், திரையிடும்போது மின்தடை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். ‘விஸ்வரூபம்‘ வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கேட்டுள்ளேன். இவ்வாறு கமல¢ஹாசன் தெரிவித்தார். பின்னர் உள்துறை செயலாளரையும் சந்தித்து கமல்ஹாசன் புகார் மனு கொடுத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum