தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலாநிதி மாறன் மீது மேலுமொரு கொலை மிரட்டல் புகார்

Go down

கலாநிதி மாறன் மீது மேலுமொரு கொலை மிரட்டல் புகார் Empty கலாநிதி மாறன் மீது மேலுமொரு கொலை மிரட்டல் புகார்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:12 pm

காவலன், எந்திரன் படங்களுக்கு தர வேண்டிய 6.25 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் தரவில்லை, கேட்கப் போன எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் செம்பியன், தினகரன் பதிப்பாளர் ஆர்.எம்.ரமேஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் மீது இயக்குனரும் தயா‌ரிப்பாளருமான ஷக்தி சிதம்பரம் புகார் தந்ததையடுத்து கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிhpவுகளில் போலீஸார் நான்கு பேர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கலாநிதி மாறன் உள்ளிட்ட நான்கு பேரும் முன்ஜாமீன் கோரியுள்ளனர்.

ஷக்தி சிதம்பரத்தின் புகாருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் சக்சேனா மற்றும் அய்யப்பனை தெரியப்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் இன்று மேலே உள்ள நான்கு பேர் மீதும் கொலை மிரட்டல் புகார் தந்தனர். இவர்கள் சன் பிக்சர்ஸின் நிர்வாகிகளாக இருந்த போது சன் பிக்சர்ஸ் விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய 24 கோடியை திருப்பித்தர கேட்டு சன் பிக்சர்ஸை அணுகியுள்ளனர். அப்போது இந்த நான்கு பேரும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

செய்யாத குற்றத்திற்காக நாங்க இரண்டு பேரும் சிறைக்குச் சென்றேhம். நான் சிறையிலிருந்த போது என்னுடைய மனைவியிடம் பல விஷயங்களை ஆர்.எம்.ரமேஷ் மிரட்டி எழுதி வாங்கினார் என்று பத்திரிகையாளர்களிடம் சக்சேனா தெரிவித்தார். நியாயம் கிடைக்க கடைசிவரை போராடுவோம் எனவும் சக்சேனா, அய்யப்பன் இருவரும் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum